Sunday, September 17, 2006

நீ மனிதன் தான்!


நீ மனிதன் தான்!

வர்ணாசிரமத்தின்
வயிற்றில் அடித்த
நீ மனிதன் தான் !

வர்ணாசிரமத்தின்
வலிக்கேற்ப
அடித்தவன்
அடியானாகவோ
அவதாரமாகவோ
ஆக்கப்படுவான்!

புத்தன் அவதாரமானான் !
நந்தன் அடியாரானான் !
நீ மனிதன் தான்
அவதாரமாக்கவோ
அடியாராக்கவோ
விடமாட்டோம் உம்மை.


புத்தன் அவதாரமானான்
அவன் கொள்கைகள்
அவதாரங்களுக்கானதானது

நந்தன் அடியாரானான்
அவன் செயல்கள்
அடியார்களுக்கானதானது

மிச்சமிருப்பது
நீ தான்

நீ மனிதனாகவே இரு
உன் கொள்கைகள்
மனிதர்களுக்காகட்டும்

நீ மனிதனாகவே இரு
உன் வாழ்க்கை
மனித வாழ்க்கையாகட்டும்

நீ மனிதனாகவே இரு
உன் செயல்கள்
மனித செயல்களாகட்டும்

உம்மை அவதாரமாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
மனிதர்களுக்கு தேவை

உம்மை அடியாராக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
மனிதர்களுக்கு தேவை

உம்மை அசாதரணமானவனாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
சாதாரணமானவர்களுக்கு தேவை

உம் பிறந்தநாளில்
உரக்க சொல்கிறோம்
நீ மனிதன் தான்.

15 comments:

said...

குழலி,

//வர்ணாசிரமத்தின்
வலிக்கேற்ப
அடித்தவன்
அடியானாகவோ
அவதாரமாகவோ
ஆக்கப்படுவான்!//

வரலாற்று உண்மையை பிரதிபலிக்கும் வரிகள்.

//உம்மை அவதாரமாக்க
விடமாட்டோம்//

விட்டால்,
வருங்காலத்தில் செப் 17 'பெரியார் சதுர்த்தி' தான். ;)

பெரியார் புகைப்படங்கள் சிலவை என் பதிவில்:http://vanakkathudan.blogspot.com/2006/09/blog-post_16.html

said...

//புத்தன் அவதாரமானான்
அவன் கொள்கைகள்
அவதாரங்களுக்கானதானது

நந்தன் அடியாரானான்
அவன் செயல்கள்
அடியார்களுக்கானதானது

மிச்சமிருப்பது
நீ தான்

நீ மனிதனாகவே இரு
உன் கொள்கைகள்
மனிதர்களுக்காகட்டும்

நீ மனிதனாகவே இரு
உன் வாழ்க்கை
மனித வாழ்க்கையாகட்டும்

நீ மனிதனாகவே இரு
உன் செயல்கள்
மனித செயல்களாகட்டும்//



குழலி,இது!நச்சென்று இருக்கு.

அவசியமான கவிதை.நன்றி.

said...

//உம்மை அசாதரணமானவனாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
சாதாரணமானவர்களுக்கு தேவை//

ஆம்! என்பதைத்தவிர வேறென்ன சொல்லி விடமுடியுமென்னால்..

Anonymous said...

//நீ மனிதன் தான்.//
பெரியார் -- நீ தான் மனிதன்!!

said...

மிக அருமையான அவசியமான கவிதை. நன்றி குழலி.

said...

அய்யாவின் பிறந்தநாளில் அருமையான கவிதை! வாழ்த்துக்கள் குழலி!

said...

//உம்மை அவதாரமாக்க
விடமாட்டோம்.
விட்டால்,
வருங்காலத்தில் செப் 17 'பெரியார் சதுர்த்தி' தான்.//

கவிதை அருமை. கமெண்ட் அருமையிலும் அருமை.

said...

குழலி

கவிதை நல்லாயிருக்கு

said...

அருமை!

said...

//வர்ணாசிரமத்தின்
வலிக்கேற்ப
அடித்தவன்
அடியானாகவோ
அவதாரமாகவோ
ஆக்கப்படுவான்!
//

வலிக்கும் உண்மை!

////உம்மை அசாதரணமானவனாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
சாதாரணமானவர்களுக்கு தேவை//

ஆம்! நிச்சயம் நீ சாமானியர்களுக்குத் தேவை!

said...

குழலி,

கவிதையும் கருத்தும் அருமை.

said...

அனைவருக்கும் நன்றி

said...

நண்பர் குழலி அவர்களே,
அருமையான கவிதை.

//உம்மை அடியாராக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
மனிதர்களுக்கு தேவை

உம்மை அசாதரணமானவனாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
சாதாரணமானவர்களுக்கு தேவை//

அற்புதமான வரிகள். பாராட்டுக்கள்.

said...

///நீ மனிதனாகவே இரு
உன் கொள்கைகள்
மனிதர்களுக்காகட்டும்///

மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் சரி, மாக்கள்?????

said...

அருமையாக கவிதை. என்னையில் குழுமத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.