Monday, October 16, 2006

அரசியல் எனக்கு பிடிக்கும் - 2

அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற நூல் பற்றிய பார்வையின் முதல் பாகம் இந்த சுட்டியில்


சோசலிச வார்த்தையை இந்திய அரசியல்வாதிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை எம்ஜிஆர் மூலம் விளக்குகிறார், எம்.ஜி.ஆர். ஒருமுறை லண்டன் பிபிசியில் பேட்டி கொடுத்தார், அதிமுக கட்சியை ஆரம்பித்த சமயம் அது, அண்ணாயிசம் தான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார், அப்போது நிருபர் அண்ணாயிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு "கேப்பிட்டலிசம், சோசலிசம், கம்யூனிசம் மூன்றும் சேர்ந்தது தான் அண்ணாயிசம் என்றார்", கேப்பிட்டலிசம் தனியுடமை, அதன் அழிவில்தான் சோசலிசமும் அதற்கடுத்த நிலையான கம்யூனிசமும் தோன்றமுடியும் இந்த மூன்றும் எப்படி ஒன்று சேரமுடியும் என்று விமர்சிக்கிறார் ஆசிரியர்.(எம்ஜிஆர் பற்றிய தகவல்களை அறியும் ஆர்வமுள்ள செல்வன் கவனிக்க)

பண்பாடு அல்லது கலாச்சாரம் என்ன?

கேள்வியை கேட்டு பதிலும் போடுகிறார் ஆசிரியர், மனித மனங்களை பாடம் செய்யும் வைத்தியம் தான் பண்பாடு அல்லது கலாச்சாரம், ஆளும் வர்க்கம் தன் தேவைகளுக்கு ஏற்ப மக்களின் மணங்களை பண்படுத்தும்.

சாதி என்பது இந்தியாவின் வர்க்க ஏற்பாடு மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு நிறுவனமும் தான், பிறப்பினால் ஒருவனை செருப்பு தைக்கவும் ஒருவனை பூசை செய்யவும் என மறுப்பின்றி மனரீதியாக ஒப்புக்கொள்ளும்படிக்கி பாடம் செய்கிறது சாதி, தொழிலாளி வர்க்கம் சாதிகளாக பிரித்து பார்ப்பதில் யாருக்கு இலாபம்.( நான் அறிந்த வரை சாதிப்பிரச்சினை பற்றி பேசிய ஒரே கம்யூனிஸ்ட் இவராகத்தான் இருக்கும் - சந்திப்பு கவனிக்க)

அடுத்ததாக ஆசிரியர் ஊடகத்தையும் விட்டு வைக்கவில்லை, மக்களின் மனங்களை முதலாளித்துவத்துக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன, மீடியா இன்று ஒரு சக்திமிக்க பண்பாட்டு நிறுவனம். எம்.ஜி.ஆரின் "ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவருக்கு நான் தொழிலாளி", ரஜினிகாந்த் "ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி" விஜயகாந்த் "எங்க முதலாளி நல்ல முதலாளி" என்றது, ரொம்பப்பிரபலமான கதாநாயகர்கள் முதலாளியை கடவுள் ஸ்தானத்தில் வைத்து பாடுவது காலம் காலமாக நடக்கின்றது, இதன் மூலம் முதலாளி-தொழிலாளி என்பது ஆண்டவன் சித்தம் என்று நம்பவைக்கிறது என திரைப்பட நாயகர்களையும் ஒரு வாரு வாருகிறார்.

எந்த கல்லுரியிலாவது தொழிற்சங்கம் பற்றி ஒரு பாடம் இருக்கிறதா ? என கேள்வியெழுப்புகிறார் (நியாயமான கேள்விதான்), பள்ளிகளும் சாதிகளும் மீடியாவும் மட்டுமல்ல மதம் குடும்பம் போன்றவையும் பண்பாட்டு நிறுவனங்கள்தான் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக நம் மூளைகளை பண்படுத்தும் என இப்படியும் ஒரு சொருகு சொருகுகிறார் ஆசிரியர் நாம் குடும்பம் வேண்டாம், சினிமா வேண்டாமென சொல்லவில்லை, உடம்பால் தொழிலாளியாக இருக்கும் நாம் உள்ளத்தால் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளோம் என்கிறார்.

பொருளாதாரப் போராட்டங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத அளவில் கலாச்சாரப் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் நடத்தியாக வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

உண்மையான அரசியல் என்பது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை பற்றியது தான், அதில் இரண்டே அரசியல் தான் இருக்க முடியும், ஒன்று இடதுசாரி மற்றது வலது சாரி, பொதுவுடமை தனிவுடமையன்றி வேறு அரசியலே கிடையாது, பொதுவுடமையும் தனிவுடமையும் சேர்ந்து தான் எங்கள் கொள்கை என்று சொல்பவர்கள் தனி உடமை ஆதரவே.

புத்தகத்தின் கடைசியில் சில கேள்வி பதில்கள் உள்ளன.

எல்லா கட்சிகளுமே இடது, வலது என்று பிரித்து போட்டுவிடமுடியுமா? இடையில் எதுவும் இல்லையா?

பொதுவுடமை, தனியுடமை இரண்டுக்கும் இடையில் யாரும் நிற்கமுடியாது, அதே சமயம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றிய கால்த்தில் அது உயர்சாதி ஆதிக்கத்துக்கு எதிராக புறாக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளின் குரலாக பிரதேச மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து ஜனநாயக இயக்கமாக பிறப்பெடுத்தது, அதன் சரித்திர முக்கியதுவத்தையும் ஜனநாயக உள்ளடகத்தையும் நாம் மறப்பதில்லை, அதற்கு உரிய மரியாதையை பாட்டாளி வர்க்கம் தரவேண்டும், ஆனால் இப்படி தோன்றும் இயக்கங்கள் காலப்போக்கில் யார் பக்கம் நிற்கின்றன என்பதை முக்கியமாக பார்க்கவேண்டும், இறுதியாக அவை வலதா இடதா என பார்க்க வேண்டும்.

அடுத்த முக்கியமான கேள்வி மேற்குவங்கத்தில் சோசலிசம் வந்துவிட்டதா?

இந்தியா ஒரு சோசலிச குடியரசு என்று பிரகடனம் செய்துவிட்டு அடுத்த வரியிலேயே தனிச்சொத்து வைத்திருப்பதை அடிப்படை உரிமை என்று பேசுகிற அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயங்குவது தான் மேற்கு வங்க அரசும் என்பதை மறந்துவிடக்கூடாது, அங்கு மட்டும் சோசலிசம் கொண்டுவரமுடியாது ஆனால் அங்கே இடது சாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஸ்ட்ரைக் செய்யும் தொழிலாளியை அந்த அரசு அடிக்காது, டிஸ்மிஸ் செய்யாது, சிறையில் அடைக்காது, இருக்கிற சட்டங்களை வைத்து அதிகபட்சமாக பாட்டாளி வர்கத்துக்கு சேவை செய்கிற அரசாக அது இருக்கிறது, இதை அம்மாநில மக்கள் புரிந்து கொண்டதாலேயே கடந்த 30 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் இடது சாரிகளுக்கே வாக்களிக்கிறார்கள்

கீழ்கண்டவைகள் நம் இணைப்பு

இந்த கேள்வியை அப்படியே தமிழகத்தில் நாற்பதாண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி என்ன செய்துவிட்டது என்றால்?

இந்திய சமூகம் சாதிய அமைப்பால் கட்டப்பட்ட ஒரு சமூகம், சட்டங்களையும் ஆழமாக ஊடுறுவியுள்ள மதத்தையும் அரசு நிர்வாகம், நீதி, ஊடகம் என அத்தனையிலும் மொத்த ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினரையும் மீறி சிறந்த முறையில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, சட்டப்படியான இந்தி மேலாதிக்கத்தையும் மீறிய தமிழ்மொழி உரிமை, குசராத்தில் கொத்து கொத்தாக கொலைசெய்யப்படும் சிறுபான்மையினர்(ஓரிரு சம்பவங்கள் தவிர்த்து) இங்கே நிம்மதியாக இருப்பது, மத்திய அரசில் தமிழகத்தின் வலுவான பங்கு, அதனால் வந்து சேரும் நன்மைகள், தேசியம் என்ற பெயரில் தமிழக நலன்களை பலியிடப்படுவதை ஓரளவாவது தடுக்க முடிவது என திராவிட கட்சிகளினால் நன்மைகள் பலவுண்டு, ஆனாலும் 2000ம் ஆண்டு கழிசல்களை அதே மதம், அதே தேசியம் அதே சாதி என அதே கட்டமைப்பை வைத்து கழுவுவது சற்று கடிணமானது தான்.

இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டதாலேயே கடந்த 40 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் திராவிடகட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள்

பொதுவாக சானித்தாளில் சிறிய சிறிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட இடது சாரி புத்தகங்களுக்கிடையில் ஓரளவு கண்ணுக்கு உறுத்தாத எழுத்து அளவும், மிக எளியநடையில் பல விவரங்கள் தரும் இந்த புத்தகம் அரசு, அரசியல் பற்றிய ஒரு புரிதலை தருகின்றது, எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு தெரிந்த அளவில் சாதிப்பிரச்சினை பற்றி பேசிய இடது சாரி புத்தகமும் இது.

27 comments:

said...

// இடஒதுக்கீடு,
தமிழ்மொழி உரிமை
சிறுபான்மையினர் இங்கே நிம்மதியாக இருப்பது, தமிழகத்தின் வலுவான பங்கு,
என திராவிட கட்சிகளினால் நன்மைகள் பலவுண்டு, //

சரியானதொரு விளக்கம்.

பதிவுக்கு நன்றி

said...

"இடது சாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஸ்ட்ரைக் செய்யும் தொழிலாளியை அந்த அரசு அடிக்காது, டிஸ்மிஸ் செய்யாது, சிறையில் அடைக்காது, இருக்கிற சட்டங்களை வைத்து அதிகபட்சமாக பாட்டாளி வர்கத்துக்கு சேவை செய்கிற அரசாக அது இருக்கிறது,"

அதே சமயம் அம்மானிலத்திலும் கேரளாவிலும் புதுத்தொழில் துவங்கவே பலரும் பயப்படுகிறார்களே!

கிருஷ்ணன்

Anonymous said...

ஐயா,

யார் வந்தாலும் இனம், மொழி, பொதுவுடமை என்று வேப்பிலை ஆட்டம் போட்டு அடிப்படை கட்டுமானங்கள் சாமான்யனுக்கும் போய் சேர வேண்டுமென்ற உணர்வை மறக்கடிக்கீர்கள்.

காலை முழுதும் உழைத்து சுகாதாரமற்ற குடிநீர் குடித்தது, சாக்கடை மண்டிய தெருவில் உறங்கி, கொசுக்களால் கடிக்கபெற்று வாழ்பவனுக்கு இனம், மொழி கிலுகிலுப்பை ஆட்டுகிறீர்கள்.

திராவிட கழகங்களின் பேச்சை கேட்டு கொசுக்கள் தற்கொலையா செய்து கொள்ள போகின்றன. அவை கடித்து என்னென்ன வியாதிகள் வர வேண்டுமோ அவையெல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆதியில் குறிப்பிட்ட இனத்தார் கடவுளை காட்டி ஏமாற்றினால், இன்று திராவிட கழகங்கள் வேறு எதையோ காட்டுகிறீர்கள். இருவரின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையே வேறு, ஆனால் நோக்கம் ஒன்றாய்தான் இருக்கிறது.

அரசு இயங்குவது வரிப்பணத்தினால் வரிப்பணம் குடி அனைவருக்கும் முறையான வழியில் செயல்படுத்த படுகிறதா என்ற சிந்தனைகளை கொண்ட விழிப்புணர்வை திராவிட கழகங்கள் வலியுறுத்துகிறதா

நல்ல குடிநீரும், முறையான கழிவகற்றலும், சாலைகளும், மருத்துவ வசதியும் ஆடம்பர பொருளாக இல்லாமல் இல்லாதவர் இருப்பவர் அனைவருக்கும் சுவாசிக்கும் காற்றை போல் சமமாக கிடைக்க வேண்டும். அதற்கு திராவிட கழகங்கள் நாற்பதாண்டு கால ஆட்சியில் என்ன செய்திருக்கின்றன?

உழைத்து பிழைக்கும் எந்த தொழிலும் தாழ்வான தொழிலல்ல.

நைக் , அடிடாஸ் செருப்பு செய்யும் போது தோன்றாத உணர்வு தனிமனிதன் செய்யும் போது ஏன் வருகிறது.

முறையாய் தொழில் படுத்த படும் போது
எல்லா தொழில்களும் லாபமீட்டும். மரியாதை வரும்.

தொழில் முனைவோருக்கு முறையான உரிமங்கள் பெற வழி, அவரது தொழில் பற்றிய முறையான பயிற்சி, கடனுதவி போன்றவற்றை கொண்டு போய் சேர்க்க வேண்டாமா?

நாற்பதாண்டுகள் போதவில்லையா இதற்கு?

நாற்பதாண்டுகளில் ஊழல் மறைந்து விட திராவிட கழகங்களின் பங்கென்ன? நிர்வாகம் அவர்களிடம்தானே இருந்தது.

ஐயா சாணிதாளில் அச்சடித்தல் தவறில்லை, அதில் கேவலமும் இல்லை. அதில் பெருமையும் இல்லை.
எந்த புத்தகத்திற்கும் அதை அளவுகோளாக கொள்ளாதீர்கள்.

ஒரு புத்தகத்தின் மதிப்பு அதில் நிரப்பபட்டிருக்கும் விஷயத்தில் உள்ளது.

இடதுசாரி தத்துவங்கள் பெரிதும் இருக்கும் வங்காள மாநிலத்தில்

1)சேரிகள் இல்லையா?
2)சாக்கடை வசதிகள் எல்லோருக்கும் உண்டா?
3)குடிநீர் பிரச்சனை இல்லையா?
4)நோய் விழிப்புணர்வு பரவலாக உள்ளதா?
5)இலஞ்சம் வாங்காத அரசு அரசு துறை உள்ளதா?
6)அரசியல்வாதிகள் தாக்கம் இல்லாத காவலமைப்பு உள்ளதா?

இவற்றிருக்கு ஆமென்ற பதில் வருமானால் வங்களாத்திலிருந்து நிர்வாகிகளை கொணர்ந்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள யோசிக்க கூடாது.

இல்லை என்ற பதில் வருமானால் வங்காளம் அதன் தொழிற்சங்கங்களோடு வாழ வாழ்த்தி விட்டு நம் மாநிலத்தின் கதையை பார்க்க வேண்டியதுதான்.

எனது இரண்டனாக்கள்
----------------------------------
சமூகத்தின் அடிப்படை வெறும் மொழி, இனம் மட்டும் அல்ல.

கல்வி,குடிநீர்,சாலை, சாக்கடை, மின்சாரம், வேலைவாய்ப்பு,
பாதுகாப்பிற்கு சாமான்யரும் அனுகவியலும் காவலமைப்பு, இலஞ்சம் வாங்கா அரசு துறைகள்.
எனக்கு தெரிந்து இவையே அடிப்படைகள்.

இவை இல்லாத நிலையில் சமூக விடுதலை என்பது வெற்று கனவே.

இந்த அடிப்படை தேவைகளை மக்கள் மத்தியில் வைத்து அவற்றை நோக்கிய விழிப்புணர்வை உருவாக்குதல் அவசியம்.

வரிப்பணம் கொண்டு இத்தேவைகள் எல்லா குடிமக்களுக்கும்
பாரபட்சமின்றி தங்கு தடையில்லாமல் செல்ல அரசு செயல்பட வேண்டும் என்பதே என் அவா.

said...

சாதிப் பிரச்சனையை தமிழகத்தில் ம.க.இ.க என்ற நக்சல்பரி அமைப்பு மிக அருமையாக வியாக்கியானம் செய்துள்ளனர்.

பண்பாட்டு புரட்சி பற்றி இந்த புத்தகத்தின் ஆசிரியர் குரல் கொடுப்பது நிரம்பவும் பாராட்டுக் குரியது. ஏனெனில் இது ஓட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகளிடம் கிடையாது.

வலது இடது பிரிப்பு மிகச் சரியாகவே செய்கிறார் ஆசிரியர். புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

திராவிட இயக்கங்கள் என்பது அடிப்படையில் முதலாளித்துவ இயக்கங்களே. அவற்றின் கோரிக்கைகளும் முதலாளித்துவ கோரிக்கைகளே.

முதலாளித்துவம் அதிகார பீடமேறியவுடன் தரகு முதலாளித்துவமாக பரிணமிப்பது இந்திய சமூக அமைப்பின் விதி.

திராவிட இயக்கங்களும் அதற்க்கு அப்பாற்ப்பட்டவையல்ல.

தாயநிதி என்ற தரகு வர்க்க முதலாளியின் தாத்தா கருணாநிதி என்ற தரகு அரசியல்வாதி.

அவ்வளவுதான். இந்த பரிணாம வளர்ச்சி அடைந்த பிற்ப்பாடு அவர்களின் திராவிடம், நாத்திகம் எல்லாம் சம்பிரதாய கொள்கைகள்தான். நடைமுறை தண்டவாளம் தலை எல்லாம் வரலாறு புத்தகங்களுக்கு மட்டுமே.

அசுரன்

said...

//காலை முழுதும் உழைத்து சுகாதாரமற்ற குடிநீர் குடித்தது, சாக்கடை மண்டிய தெருவில் உறங்கி, கொசுக்களால் கடிக்கபெற்று வாழ்பவனுக்கு இனம், மொழி கிலுகிலுப்பை ஆட்டுகிறீர்கள்.

திராவிட கழகங்களின் பேச்சை கேட்டு கொசுக்கள் தற்கொலையா செய்து கொள்ள போகின்றன. அவை கடித்து என்னென்ன வியாதிகள் வர வேண்டுமோ அவையெல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆதியில் குறிப்பிட்ட இனத்தார் கடவுளை காட்டி ஏமாற்றினால், இன்று திராவிட கழகங்கள் வேறு எதையோ காட்டுகிறீர்கள். இருவரின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையே வேறு, ஆனால் நோக்கம் ஒன்றாய்தான் இருக்கிறது.

அரசு இயங்குவது வரிப்பணத்தினால் வரிப்பணம் குடி அனைவருக்கும் முறையான வழியில் செயல்படுத்த படுகிறதா என்ற சிந்தனைகளை கொண்ட விழிப்புணர்வை திராவிட கழகங்கள் வலியுறுத்துகிறதா//

I accept with this part of Annony's argument


***************

//இடதுசாரி தத்துவங்கள் பெரிதும் இருக்கும் வங்காள மாநிலத்தில்

1)சேரிகள் இல்லையா?
2)சாக்கடை வசதிகள் எல்லோருக்கும் உண்டா?
3)குடிநீர் பிரச்சனை இல்லையா?
4)நோய் விழிப்புணர்வு பரவலாக உள்ளதா?
5)இலஞ்சம் வாங்காத அரசு அரசு துறை உள்ளதா?
6)அரசியல்வாதிகள் தாக்கம் இல்லாத காவலமைப்பு உள்ளதா?

இவற்றிருக்கு ஆமென்ற பதில் வருமானால் வங்களாத்திலிருந்து நிர்வாகிகளை கொணர்ந்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள யோசிக்க கூடாது.

இல்லை என்ற பதில் வருமானால் வங்காளம் அதன் தொழிற்சங்கங்களோடு வாழ வாழ்த்தி விட்டு நம் மாநிலத்தின் கதையை பார்க்க வேண்டியதுதான்.

//


வாங்காளத்தில் இடது சாரி என்ற பெயர் கொண்ட ஒரு தரகு வர்க்க அரசியல் போலி கம்யுனிஸ்டு கட்சி ஆட்சி செய்கிறது. ஒரு விசயத்தை கம்யுனிசம் என்று சொல்லும் முன் அது நடைமுறைப்படுத்தும் பொருளாதார திட்டத்தை பார்க்கவும். மேற்கு வங்கத்தில் சொசலிசம் கிடையாது. அங்கும் தொழிலாளர் ஸ்டிரைக்குள நசுக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் இங்கு உள்ளது போல இல்லை.

ஆனால், சோசலிசம் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னாள் சோசலிச சீனா, ரஸ்யா
சமூகங்களில் அனானி குறிப்பிட்ட விசயங்கள் எந்த நாட்டையும் சுரண்டாமலேயே நடந்துள்ளன. எனவே, அவரே குறிப்பிட்டுள்ள படி சோசலிச பொருளாதாரத்தை அவர் ஆதரிக்க வேண்டுமெனெ கேட்டுக் கொள்கிறேன். சோசலிச கட்சியின் பிரதிநிதிகளை அவர் சந்திக்க விரும்பக் கூடுமெனில் என்னால் இயன்ற உதவிகளை செய்யத் தாயார் :-))

************

//கல்வி,குடிநீர்,சாலை, சாக்கடை, மின்சாரம், வேலைவாய்ப்பு,
பாதுகாப்பிற்கு சாமான்யரும் அனுகவியலும் காவலமைப்பு, இலஞ்சம் வாங்கா அரசு துறைகள்.
எனக்கு தெரிந்து இவையே அடிப்படைகள்.

இவை இல்லாத நிலையில் சமூக விடுதலை என்பது வெற்று கனவே.

இந்த அடிப்படை தேவைகளை மக்கள் மத்தியில் வைத்து அவற்றை நோக்கிய விழிப்புணர்வை உருவாக்குதல் அவசியம்.

வரிப்பணம் கொண்டு இத்தேவைகள் எல்லா குடிமக்களுக்கும்
பாரபட்சமின்றி தங்கு தடையில்லாமல் செல்ல அரசு செயல்பட வேண்டும் என்பதே என் அவா. ///



இவற்றை செய்ய தடையாக இருப்பது என்னவென்பது பற்றிய அனானியின் கருத்துக்களை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்


அசுரன்

said...

செல்வனுக்கு எம்.ஜீ.ஆர் பற்றி தகவல்கள் தந்ததற்கு என் நன்றிகள்

சந்திப்புக்கு தத்துவத்தில் சாதி எங்கே வருகிறது என்று கூறியதற்கும் நன்றி.

அனானி(விவரமான அனானி)க்கு அசுரன் கூறிய பதில்களுக்கு அனானி பதிலளிப்பார் என்றெ நானும் நம்புகிறேன்.ஏனெனில் அனானியின் சில கேள்விகள் என்னுடையதும்.

Anonymous said...

அசுரன்/முத்து

உங்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று நான் கூறவில்லை.

உங்கள் ஆர்வமோ, என் ஆர்வமோ சுபிட்சமான மக்கள் சமூதாயத்தை நோக்கியே. சுபிட்சம் நோக்கி போகும் பாதையே வேறாகிறது.

அசுரன்,

சுயமரியாதையும், பகுத்தறிவும் பரவலாக இல்லா இடங்களில் எக்தகைய இசங்களும் பயனிலாமல் போகும்.

குடும்பம், சொத்து என்ற அடித்தளம் இருக்கும் வரை ஆசை இல்லாத மனிதன் இருக்க முடியாது. ஆசை இல்லாத இல்லாவிட்டால் ஆசை குறைக்கப்பட்ட மனிதன் கண்டுபிடிக்கப்படும் வரையில் பொதுவுடமை தத்துவம் எதற்கும் ஆகாது. இது என் தனிப்பட்ட கருத்து.

மாற்றுக் கருத்துள்ளவர்களை
வாய்பூட்டு அணிவித்து கைவிலங்கு மாட்டி அழகு பார்க்கும் சோவியத்தும், சீன தேசமும் சொர்க்க பூமியாய் காட்டூகிறீர்கள்.

எல்லைச்சாமியான ராணுவ வீரனை நீங்கள் கூலி என்று இந்தியாவிலிருந்து பதியலாம். நீங்கள் காட்டிய சொர்க்க பூமியில் இது போல் பதிகையில் சொர்க்கத்திற்கோ,நரகத்திற்கோ விசா வழங்கப்படும்.

முத்து,

மனித வாழ்விற்கு எது அடிப்படை? இனம், மொழி வேட்கையா இல்லை சுகாதாரமான தெருக்களும், இலஞ்சம் கேட்கா அரசு ஊழியனா என கேட்டால் நான் இரண்டாவதைதான் தேர்வு செய்வேன்.

இயல்பாக சக மனிதனை உணர்சிகளின் விளிம்பில் தள்ளக்கூடிய உணர்வுகள்தான் இனம், மொழி கோட்பாடுகள். கோபம், ஆவேசம் என்ற அதீத மனநிலை வாயிலாக வெளிப்படுவது. எல்லா விடயங்களையும் மறக்க சொல்லி இந்த அதீத உணர்வுகளில் நாற்பதாண்டுகாலமாய் கட்டுண்டு இருக்க பழகி உள்ளோம்

திராவிட அரசியல் என்பதே கொல்லனின் ஊதுகுழல் போல இந்த உணர்வகளை ஊதி கொண்டிருப்பதே என ஆகி விட்டது.

திராவிட அரசியல்வாதிகளிடமிருந்துதான்
உழவர் சந்தை, மினி பஸ் போன்ற நல்லதிட்டங்கள் வந்தன். ஆனால் இது போல் பல நல்ல விடயங்கள் வந்திருக்கலாம்.

அடிப்படை என்ன என்பது வரையறுக்கப்படா நிலையில் ஊதுகுழலின் மறுப்பக்கம் தனலாய் தகித்துக் கொண்டே இருக்கிறோம். எனவனேவனா வக்கனையாய் குளிர்காய்கிறான். இதுதான் என் ஆதங்கம்.

விழிப்புணர்வு என்பது இனம், மொழியோடு முடிவடைகிறதா?

திராவிடன்,தமிழன் எனக் கூறி கொண்டு கை நிறைய கையூட்டு வாங்கி வீட்டு சாக்கடையால் தெரு நிரப்பினால் விழிப்புணர்வு வருமா?

திராவிடன், தமிழன் என முத்திரை குத்தினால் சுயமரியாதை வந்து ஒட்டிக் கொள்ளுமா?

விதவிதமான பட்டப்பெயர்களை வாங்கி ஒட்டிக் கொள்வது சுயமரியாதையா?

ஆட்சிக்கு வந்தவர்கள் காட்டும் கிலுகிலுப்பை கண்டு மயங்காத மனநிலை வரும் போது கட்டுமான விழிப்புணர்வு நோக்கி வேறு வழியிலாமல் அவர்கள் செல்ல வேண்டியிருக்கும்.

said...

//மனித வாழ்விற்கு எது அடிப்படை? இனம், மொழி வேட்கையா இல்லை சுகாதாரமான தெருக்களும், இலஞ்சம் கேட்கா அரசு ஊழியனா என கேட்டால் நான் இரண்டாவதைதான் தேர்வு செய்வேன்.
//
கற்பனை, தேர்வு செய்வது, நினைப்பது இதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நடப்பதை, நிதர்சனத்தை மட்டும் பேசுவோம், இங்கே மொழி, இனம் இவையாவும் போர்கருவிகள், நீங்கள் போர் கருவிகளை பார்க்கின்றீர்கள், போருக்கான காரணத்தை பார்க்க மறுக்கின்றீர்கள், நீங்கள் மேற்கூறிய உதாரணம் வெங்காயத்தையும், அல்வாவையும் ஒப்புமை செய்வதற்கு இணையானது, எந்த ஆயுதம் உன் மீது பயன்படுத்தப்படுகின்றதோ அதே ஆயுதத்தைதான் எதிர்க்க பயன்படுத்த வேண்டிய நிலை, இந்தி மொழியாதிக்கம் வெறியாக மாறி அழுத்தியபோது தான் தமிழ்மொழியை உணர்வை பயன்படுத்த வேண்டிய நிலை, ஒருவன் தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று சாதியால் அழுத்தப்படும்போது அவன் அந்த சாதியின் பெயரால் தான் ஒன்று கூடி அதன் அழுத்தத்தை எதிர்க்க முடியும், இனத்தின் பெயரால் ஒருவன் அழுத்தப்படும்போது அதே இனத்தின் பெயரால் போராடித்தான் அவனால் அந்த அழுத்ததிலிருந்து விடுபடமுடியும். இனியாவது வெங்காயத்தையும் அல்வாவையும் ஒப்பிடும் போக்கை நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

//விழிப்புணர்வு என்பது இனம், மொழியோடு முடிவடைகிறதா?
//
இல்லை, அதையும் தாண்டியது என்பது உண்மை...

திராவிட கட்சிகளின் சில போலித்தனங்கள் திராவிடத்தின் தவறுகள் அல்ல, அது அந்த திராவிட கட்சிகளின் தவறுகள்.

said...

அனானி நன்றி,

நல்ல கருத்துக்கள்.இது அனைவருக்கும் பொருந்தும்.நீங்கள் கூறிய விஷயங்களை மட்டும் வைத்து எதையும் திராவிடத்திற்கு எதிராக திருப்ப முடியாது என்று தோன்றுகிறது.

ஆக்ரமிப்பு,திணிப்பு,மேலாண்மை ஆகியவற்றை எதிர்த்து உருவான இயக்கங்களையும் மற்ற ஒழுக்கங்களையும் குழப்பாமல் பார்க்கும் நோக்கும் தேவைப்படுகிறது நமக்கு.

இரண்டு வேறு திசைகள்.(அதிகாரம் சம்பந்தப்பட்டிருப்பதால் பற்றிக்கொள்ளும் தொலைவில் உள்ளது)

Anonymous said...

முத்து,

//.நீங்கள் கூறிய விஷயங்களை மட்டும் வைத்து எதையும் திராவிடத்திற்கு எதிராக திருப்ப முடியாது என்று தோன்றுகிறது//

நான் இங்கு ஏன் இனக்குழுக்கள் அமைக்கீறிர்கள் என்று வினா எழுப்பவில்லை. அது இந்த பதிவின் நோக்கம் அல்ல.

இவை நாற்பதாண்டு கால திராவிட கழக ஆட்சியினை பற்றிய எனது கருத்துகள்

கழகங்கள் கட்டுமானங்களை நோக்கி கண்பார்க்காதா என்ற ஏக்கம் உண்டு.

//ஆக்ரமிப்பு,திணிப்பு,மேலாண்மை ஆகியவற்றை எதிர்த்து உருவான இயக்கங்களையும் மற்ற ஒழுக்கங்களையும் குழப்பாமல் பார்க்கும் நோக்கும் தேவைப்படுகிறது நமக்கு.//

இனம்,மொழி மட்டும் திணிக்கப்படுவதில்லை.

சேரிகளில் வழியும் சாக்கடை சேரியின் மீது திணிக்கப்படுகிறது.

செருப்பு தைப்பவனிடம் தொழில் முறைப்படுத்தும் உரிமை பரிக்கப்படுகிறது.

அரசின் வரிப்பணம் குறிப்பிட்ட சிலரின் வசதிக்காக கண்முன் செலவிடப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை எல்லோரிடமும் திணிக்கப்படுகிறது.

இந்த வகை திணிப்போ, அதிகார மனப்பான்மையையோ, உரிமைப் பறிப்போ மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது

குழலி,

நிதர்சனங்களை சந்திக்க நேர்ந்ததால்தான் பின்னூட்டம்.

மின்சார பற்றாக்குறையும்,சிக்கன் குனியாவும் வீட்டை எட்டிப்பார்க்கிறது. மழை நீர் வடியா சாலைகள் மேல் வண்டி ஒட்டினால் சிரமமாக இருக்கிறது. மாத சம்பளத்தில் வரிப்பணம் எடுக்கப்பட்டால் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டிக் கொள்கிறது.குழாயடி சண்டையிட்டு குடிநீர் பிடித்தவை மனதில் நிற்கிறன.

உங்களுக்கு இந்தி எதிர்ப்பு முக்கியமாக படுகிறது.

அல்வா,வெங்காயம் என்று என்ன பெயர் வைத்தாலும் நான் சொன்னவை எனக்கு முக்கிய பிரச்சனையாக படுகிறது.

அனானியாக பின்னூட்டமிட்டாலும் பதிப்பித்து பதிலலித்தமைக்கு நன்றி

said...

//மின்சார பற்றாக்குறையும்,சிக்கன் குனியாவும் வீட்டை எட்டிப்பார்க்கிறது. மழை நீர் வடியா சாலைகள் மேல் வண்டி ஒட்டினால் சிரமமாக இருக்கிறது. மாத சம்பளத்தில் வரிப்பணம் எடுக்கப்பட்டால் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டிக் கொள்கிறது.குழாயடி சண்டையிட்டு குடிநீர் பிடித்தவை மனதில் நிற்கிறன.
//
இதற்கு திராவிட கட்சிகள் மட்டும் தான் காரணமா? இது நிர்வாகக்கோளாறு, இதற்கும் திணிப்பின் எதிர்ப்பிற்கும் என்ன தொடர்பு? குண்டுகுழியில்லாத சாலைகளும், கொசு கடிக்காதது போல் நகரங்களையும் செய்து கொடுக்க அமெரிக்க அரசாங்கம் தயாராக இருந்தால் அதன் ஒரு மாநிலமாக இந்தியாவை மாற்றிவிடலாமே? இதையெல்லாம் பாக்கிஸ்தான் செய்து கொடுக்கும் ஆனால் எல்லோரும் உருதுக்கு மாறவேண்டும், இசுலாமிய மதத்தை ஏற்கவேண்டும் தயாரா என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள், ஆனால் இங்கே அப்படி கூட இல்லை, அதே கொசுக்கள், அதே குண்டுகுழி சாலைகள் இதனோடு இந்தி ஆதிக்கமும் சேர்கின்றது, இந்தி ஆதிக்கம் என்பது வெறும் மொழி மேலாதிக்கம் மட்டுமல்ல, இதுவும் ஒருவகையான அடிமைப்படுத்தலே.

மீண்டும் சொல்கிறேன் நிர்வாக கோளாறு வேறு திராவிட கொள்கை வேறு, நிர்வாக கோளாறுகள் இருப்பதற்காக திராவிடம் என்பதே தவறு அல்ல, மும்பையில் கொசுக்கள் இருப்பதால் மும்பை தவறு, இந்தியாவில் குண்டுகுழி சாலைகள் இருப்பதால் இந்திய கருத்தாக்கமே தவறு (என்னை பொறுத்தவரை இந்திய தேசியம் வேறு காரணங்களுக்காக போலியானது தான் என்பேன்) என்பது இந்திய கருத்தாக்கத்தை மறுப்பவர்களுக்கு சரியான காரணமாக இருக்குமா?

இப்போதும் சொல்கிறேன் வெங்காயத்தையும் அல்வாவையும் ஒப்பிடாதீர்கள்.

Anonymous said...

குழலி,

திணிப்பு என்பதை நீங்கள் இனம்,மொழியோடு நிறுத்திக் கொள்கிறீர்கள்.

எனக்கு குடிநீர், கழிவு நீர் அகற்றல் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு மோசமான கட்டுமான வசதிகள் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதாக தோன்றுகிறது. போன பின்னூட்டத்தில் இதை குறிப்பிட்டேன். சமூக அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது ஏனேன்று கேட்கும் போது இனம்,மொழி என்று உணர்வு நிலை பதில்கள் வழங்கப்படுகிறது. சமூக கவனம் முழுக்க முழுக்க இந்த உணர்வு நிலை விடயங்களில் சிக்கி நிற்கின்றது.

நாற்பதாண்டுகளில் சகல அதிகாரமோடு புரிந்தும் நிர்வாகம் கற்றுக் கொள்ளவில்லையா?

ஊழல் புரை மண்டும் நிர்வாக கோளாறுகளை இனியாவது சரி செய்யலாம் அல்லவா?

காவல் துறையை சாமான்யரின் தோழனாக்கும் முயற்சியை இனியாவது செய்யலாம் அல்லவா?

சரியோ தவறோ கழகங்களின் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலம். அவர்களை கட்டுமானங்களின் தேவையை நோக்கி திருப்புவது எப்படி? உணர்வு நிலை பூசைகளுக்கு கை தட்டாமல் கட்டுமான தேவை நோக்கி குரல் எழுப்பலாம்.

இப்போதும் மொழி, இனம், கலாசாரம் என்று குரல் கொடுத்துக் கொண்டு திரைப்படங்கள், கற்சிலைகள், கோவில் பூசைகள், இந்தி எதிர்பென்று என்று விவாதித்துக் கொண்டு
அடிப்படை தேவைகள் பக்கம் விழி திருப்ப அவகாசம் இன்றி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

அதை விட வருத்தம் தரும் விடயம் எது அடிப்படை என்றே தெரியாமல் இருப்பது.

ஊழல் ஒழிப்பு மற்றும் அடிப்படை கட்டுமானங்கள் உங்களுக்கு அல்வாவாக தெரிந்தால் என்ன சொல்ல முடியும்.

அமெரிக்காவை கேள், பாகிஸ்தானை கேள் என்பதெல்லாம் கழகப் பேச்சாளர்கள் போல் உள்ளது.

நீங்கள் விடய ஞானம் உள்ள பதிவர்.

உங்களிடமிருந்து இது போன்ற பதிலா?

திராவிட கொள்கைகள் நிர்வாக குறைபாடுகளோடு இருப்பின் அதை களைவதே உங்களை போன்ற திராவிட தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும்.

வரிப்பணத்தின் அடிப்படை. வரி வசுலிப்பதின் முக்கியம். வரி செலுத்துவோரை எங்கனம் அதிகப்படுத்துவது போன்ற நிர்வாக ரீதியான கோட்பாடுகளை யாரும் கண்டு கொள்வதே இல்லையே?

தெரியாதது தவறில்லை. கற்றுக் கொள்ள மறுப்பது தவறு.

பழம் பெருமை பேசுவதும், பிற இனத்தை விரல் நீட்டி தன் இனத்தை சுரண்டுவதும் கோட்பாடுகளாய் மாறாமலிருக்க முயற்சி செய்தால் நலம். உங்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். என் மன ஆதங்கம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

said...

அனானி,

ஓரளவு மேட்டரை புரிந்துக்கொண்டீர்கள் என்று தோன்றுகிறது.

நீங்கள் சொல்லும் அவலங்களை நாங்கள் போராடும் விஷயத்தோடு இணைப்பதுதான் பிரச்சினை.

said...

//வரிப்பணத்தின் அடிப்படை. வரி வசுலிப்பதின் முக்கியம். வரி செலுத்துவோரை எங்கனம் அதிகப்படுத்துவது போன்ற நிர்வாக ரீதியான கோட்பாடுகளை யாரும் கண்டு கொள்வதே இல்லையே?
//
கண்டுகொள்வதே இல்லை என்பதில்லை, அதையும் செய்கிறோம், திராவிட கட்சிகளையும் அதன் நிர்வாக கோளாறுகளையும் சில போலித்தனமானவற்றையும் இதே திராவிட தமிழர்கள் வலைதளத்தில் பல பதிவுகள் பேசியிருக்கின்றன, அருண்மொழி அவர்களின் அரசியல் சூழல் பதிவும், இன்னும் சில பதிவுகளும் பேசுகின்றன, எங்களுக்கு எந்த திராவிட கட்சியையும் எந்த விதமான விமர்சனங்களும் இல்லாமல் தாங்க வேண்டுமென்ற அவசியம் எங்களுக்கு இல்லை, அது மட்டுமில்லாமல் அடிப்படை கட்டுமான பிரச்சினைகளை பதிவர்கள் இந்த தளத்தில் பதியவில்லை என்றாலும் அவரவர்கள் பதிவில் தொடர்ந்து பதிந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.

திராவிட தமிழர்கள் வலைதளம் தொடங்கப்பட்டதன் நோக்கம் தெளிவாக செயல் தலைவர் முத்து அவர்கள் இந்த பதிவில் கூறியுள்ளார்... அதிலிருந்து சில வரிகள் கீழே...

வலைத்தளத்தின் தேவை

திராவிடம் என்றாலே கெட்ட வார்த்தை என்பது போல் ஒரு கட்டமைப்பு படிப்படியாக இந்த நாட்டில் செய்யப்பட்டு வருகிறது.அதை தடுப்பதே நம் தலையாயக் கடமை.

வாழ்க்கையில் முன்னேறிய ஆட்கள் திராவிடத்தைப்பற்றி தாங்கள் வைத்திருக்கும் தவறான பார்வையை மீள்பார்வை செய்ய தூண்டுவதும் படித்தவர்கள் மத்தியில் திராவிடத்தை பரப்புவதும் நம் நோக்கம்.

நடுநிலையாளர்களை திராவிடத்தை அனுதாபத்துடன் பார்க்கவைப்பது நம் இன்னுமொரு நோக்கம்.

இந்த பதிவில் திராவிட வரலாறு, திராவிடபெருமை,திராவிடத்தின் தேவை ஆகியவற்றை பற்றி செய்திகள்,கட்டுரைகள் ஆகியவை வெளிவரும்.

திராவிட பெரியவர் கலைஞரைப்பற்றி வரும் விஷம பிரச்சாரங் களுக்கு பதில் தரும் ஒரே இடமாக இது திகழும்.அதே சமயத்தில் கலைஞர் பாதை மாறினால் தட்டிகேட்கும் இடமாகவும் இது திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்

தம்மை தமிழனாக உணரும் எவரும் இதில் இணைந்துக்கொள்ளலாம். கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.பெயருடனோ பெயரில்லாமலோ பிரசுரிக்கப்படும்.

திராவிடம் சம்பந்தப்படட விஷயங்களை உலகிற்கு கொண்டுச்செல்ல் வாருங்கள் திராமுமு வலைத்தளம்.

சாதி,மதம்,ஊர் ஆகியவை தடையில்லை.பிறப்பால் எந்த சாதியில் இருந்தாலும் தமிழரின்,திராவிடரின் இருப்பை அங்கீகரிக்கும் எவரும் இதில சேரலாம்.

சாதியால் மதத்தால் பிரிக்கப்பட்ட நாம் இனத்தால் மொழியால் ஒன்றுபடுவோம்.

முக்கியமான சட்டதிட்டம் நாகரீகமாக எழுதவேண்டும் என்பதுதான்.பல்வேறு சமயங்களில் பல்வேறு தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கஇருக்கும் இந்த வலைத்தளம்,உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பிற்காலத்தில் ஒரு கட்சியாகவும் ஆகும்.

நாத்திகனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.திராமுமு பன்முகத் தன்மையை ஆதரிக்கிறது.மதவெறியை எதிர்க்கிறது.எந்த மதத்திற்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவே திராமுமு இருக்காது.

புனிதபிம்பங்களின் பாணியி்ல சாதியை பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது, ஆனால் தேவையான நேரம் சாதி பார்ப்பது என்ற கொள்கையில் திராமுமு விற்கு நம்பிக்கை இல்லை.

said...

அனானி அய்யா,

//திராவிடன், தமிழன் என முத்திரை குத்தினால் சுயமரியாதை வந்து ஒட்டிக் கொள்ளுமா//

ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் முத்திரை குத்தி வியாபாரம் பண்ணுபவர்கள் சொல்வார்கள்.இதை ஒத்து கொண்டு முத்திரை குத்திக்கொண்டவர்கள் சுயமரிதையாடு வாழும் தமிழர்கள்.மற்றவர்கள் தமிழரல்லர்.


//விதவிதமான பட்டப்பெயர்களை வாங்கி ஒட்டிக் கொள்வது சுயமரியாதையா?//

இப்படி பேசும் நீங்கள்,கருணாநிதி, ஜெயலலிதா போன்ற, ஒடுக்கப்பட்டவர்கள் பட்டங்கள் பெறுவது வேறு எப்படி சாத்தியம் என்பதையும் முன்வைத்தால் அது நியாயமாக இருக்கும்.

பாலா

said...

//ஓரளவு மேட்டரை புரிந்துக்கொண்டீர்கள் என்று தோன்றுகிறது//

அனானி அய்யா,

முத்து அய்யாவே சொல்லிவிட்டார். இப்பேர்பட்ட Rocket Science ஐ புரிந்து கொண்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

பாலா

பாலா

said...

//புனிதபிம்பங்களின் பாணியி்ல சாதியை பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது, ஆனால் தேவையான நேரம் சாதி பார்ப்பது என்ற கொள்கையில் திராமுமு விற்கு நம்பிக்கை இல்லை.//

குழலி அய்யா,

திராமுமு விற்கு வேறு எந்த கொள்கையில் நம்பிக்கை?
எப்பவும், இமைப் பொழுது கூட விடாமல் திராவிடம் திராவிடம் என்று ஜாதி வெறியை புகுத்துவதிலா?

பாலா

said...

////புனிதபிம்பங்களின் பாணியி்ல சாதியை பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது, ஆனால் தேவையான நேரம் சாதி பார்ப்பது என்ற கொள்கையில் திராமுமு விற்கு நம்பிக்கை இல்லை.//

குழலி அய்யா,

திராமுமு விற்கு வேறு எந்த கொள்கையில் நம்பிக்கை?
எப்பவும், இமைப் பொழுது கூட விடாமல் திராவிடம் திராவிடம் என்று ஜாதி வெறியை புகுத்துவதிலா?

பாலா //
பாலா புரியலையா? கோவிலில் சாதி பார்ப்பது, வீடு, சமூகம் என அத்தனைக்கும் சாதி பார்ப்பது, சாப்பாட்டு வழக்கத்திலிருந்து எல்லாமே சாதியால் வருவது, ஆனால் இடஒதுக்கீடு என்றால் சாதியெங்கேப்பா இருக்கிறது என்று பேசுவது, பொதுவில் சாதீய ஏற்ற தாழ்வுகளை பேசினாலே ஏதோ பேசக்கூடாததை பேசியது போன்ற கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் புனிதபிம்பங்களைப்போல இருக்க மாட்டோம் என்பதுதான் அது... சொல்லியிருப்பது மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு கூட புரிந்திருக்கும் :-)

said...

//சொல்லியிருப்பது மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு கூட புரிந்திருக்கும் //

குழலி அய்யா,

சொன்னது ஒரு மூன்றாம் வகுப்பில் ஃபெயில் ஆன மாணவன் போலிருந்தது. இப்போ புரிந்து விட்டது..எனக்கு பாஸ் மார்க் போட்டுடங்கய்யா..

பாலா

said...

//இப்போதும் சொல்கிறேன் வெங்காயத்தையும் அல்வாவையும் ஒப்பிடாதீர்கள்//

குழலி அய்யா,

வெங்காயமே அல்வா குடுத்ததே..அந்த அல்வா தானே திராவிடம்.

இப்ப இந்த திராவிட கட்சிகள் கொடுப்பதும் ஒரிஜினல் வெங்காய அல்வா தான்.
புது ஃப்ளேவர்கள் உள்ளன. அன்ணா ஃப்ளேவர் ,
எம் ஜீஆர் ஃப்ளேவர் இத்யாதி.. அவ்வளவு தான்.
இந்த வெங்காய அல்வாவை தமிழ் நாட்டில் நல்லா விற்பனை பண்ணி வியாபாரம் செஞ்சாங்க/செய்யராங்க..

ஏனைய திராவிடர்கள்(?) இந்த அல்வாவை வாங்க மறுத்து விட்டார்கள்.
அதனால் அவர்கள் திராவிடர் அல்லாமல் போனார்கள்.
திராவிடமும் ஒரு Niche பிஸினஸ் ஆனது.

பாலா

said...

//சரியோ தவறோ கழகங்களின் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலம்//

அனானி அய்யா,

ஐயயோ..என்ன சொல்றீங்க..தமிழுக்கும்,தமிழகத்துக்கும் இருண்ட எதிர்காலம் தான் என்று பயமுறுத்தறீங்க.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்குங்க..
எதிர்காலம், வரலாற்றில் "The rise and fall of fraudulent Dravidian Politics" என்பதை பதிவு செய்யும்.

பாலா

Anonymous said...

//இந்திய சமூகம் சாதிய அமைப்பால் கட்டப்பட்ட ஒரு சமூகம், சட்டங்களையும் ஆழமாக ஊடுறுவியுள்ள மதத்தையும் அரசு நிர்வாகம், நீதி, ஊடகம் என அத்தனையிலும் மொத்த ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினரையும் மீறி சிறந்த முறையில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, சட்டப்படியான இந்தி மேலாதிக்கத்தையும் மீறிய தமிழ்மொழி உரிமை, குசராத்தில் கொத்து கொத்தாக கொலைசெய்யப்படும் சிறுபான்மையினர்(ஓரிரு சம்பவங்கள் தவிர்த்து) இங்கே நிம்மதியாக இருப்பது, மத்திய அரசில் தமிழகத்தின் வலுவான பங்கு, அதனால் வந்து சேரும் நன்மைகள், தேசியம் என்ற பெயரில் தமிழக நலன்களை பலியிடப்படுவதை ஓரளவாவது தடுக்க முடிவது என திராவிட கட்சிகளினால் நன்மைகள் பலவுண்டு, ஆனாலும் 2000ம் ஆண்டு கழிசல்களை அதே மதம், அதே தேசியம் அதே சாதி என அதே கட்டமைப்பை வைத்து கழுவுவது சற்று கடிணமானது தான்.இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டதாலேயே கடந்த 40 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் திராவிடகட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள்//


முத்து ,


எனக்கு புரிதலில் பிரச்சனை அல்ல.


மேலே உள்ள பதிலில் நாற்பதாண்டுகளாய் ஆளும் திராவிட கட்சிகள் திராவிட கொள்கைகளின் நிர்வாக குறைபாடுகளை 2000ம் ஆண்டு அமைப்பின் மேல் வைத்து தங்களை குறையறதாய் காட்டிக் கொள்கிறன. உங்கள் வார்த்தைகளில் சொன்னால் புனித பிம்பமாய் காட்டப்படுகிறது.

மேற் சொன்ன பதிலில் கட்டுமான மறுப்பையும், ஊழல் வளர்ச்சியை பற்றியும் எந்த வார்த்தைகளுமே இல்லை. மறந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா என்ற சந்தேகம் வந்தது . அதனால்தான் பின்னூட்டமிட்டேன்.


2000 ஆண்டு அமைப்புக்கு மாற்றாய் கொள்கைகள் மட்டும் இருந்தால் போதாது, நிர்வாகமும் வேண்டும். நிர்வாக திறன்ற்ற கொள்கைகள் ஏட்டு சுரைக்காயல்லவா? பல விடயங்களை கூர்ந்து நோக்கி தொடர்ந்து பதிந்து வரும் உங்களுக்கு தெரியாததல்ல


கடவுள் என்னும் போதையை, இனக் குழு கொண்டு இடம் பெயர்த்து அதே அடக்குமுறையை சனங்களின் மீது பிரயோகித்து கேட்டால் நீதான் ஓட்டு போட்டாய் என்று சொல்லுதல் நேர்மையான பதிலன்று.


சாதியை கற்பித்தவனும் நான் சொல்லிக் கொடுத்தால் நீ ஏன் ஏற்றுக் கொண்டாய் என்று தானே சமாளிப்பு சொல்கிறான்.


அடக்குமுறையின் பொறுப்பை யாரும் தங்களிடம் எடுத்துக் கொள்வதில்லை. மக்களை மந்தை மனப்பான்மையில் வைத்து விட்டு அப்புறம் அந்த மனநிலையைதான் குறை சொல்கிறார்கள்.


குழலியின் பதிலை பார்த்தேன். சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டுதான் அமைப்பை நடத்தி கொண்டு இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

இது போல் ஏதேனும் புள்ளிகளில் சந்திக்க நேர்ந்தால் உரையாடலாம்.

இனக்குழுக்கள் பற்றி எனக்கு வேறு கருத்துகள் உண்டு. ;-) ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல.

பொறுமையாய் பின்னூட்டங்களை பிரசுரித்து, உடனுக்குடன் பதில் தந்தமைக்கு நன்றி.

said...

//ஐயயோ..என்ன சொல்றீங்க..தமிழுக்கும்,தமிழகத்துக்கும் இருண்ட எதிர்காலம் தான் என்று பயமுறுத்தறீங்க.
//
இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்று குறிக்கப்படுபவன பற்றிய சில கட்டுரைகள் இந்த வலைதளத்தில் சில வெளிவர இருக்கின்றன, திராவிட கட்சிகளின் ஆட்சி இருண்டகாலம் தான், ஆனால் யாருக்கு இருண்ட காலம் என்பதில் தான் விசயமே, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழுக்கு பொற்காலமாக இல்லையென்றாலும் கண்டிப்பாக கண்டிப்பாக தமிழுக்கு இருண்டகாலமல்ல, இந்த கட்சிகளின் ஆட்சி மொத்த தமிழகத்திற்கும் இருண்டகாலமாக இருக்காது, ஆனால் காலம் காலமாக பொற்காலமாக இருந்த சிலருக்கு இந்த ஆட்சிகள் இருண்டகாலம் தான் :-)

said...

அசுரன் அய்யா,

நீங்கள் சொன்னது "//முதலாளித்துவம் அதிகார பீடமேறியவுடன் தரகு முதலாளித்துவமாக பரிணமிப்பது இந்திய சமூக அமைப்பின் விதி.//".

மிகவும் சரி. ஆனால் அமெரிக்க,ஆங்கிலேய,ஏனைய ஐரோப்பிய நாடுகளின், மற்றும் ரஷ்ய,சீன சமூக அமைப்புகளுக்கும் இந்திய சமூக அமைப்புககும், உள்ள ஒற்றுமை/வேற்றுமை பற்றி விளக்கமா சொல்லிக்கொடுத்தீங்கன்னா, நாங்களும் புரிந்து கொண்டு சிறந்த சமுதாய மாற்றத்தை கொண்டு வர பாடு படும் உங்களுடன் சேர்ந்து போராட வசதியாக இருக்கும்.

பாலா

said...

//யாருக்கு இருண்ட காலம் என்பதில் தான் விசயமே, //

குழலி அய்யா,

என்னங்கய்யா இந்த கேள்வியை வைக்கிறீங்க..மூணாம் கிளாஸ் பையன் கூட சொல்வானே..

தி மு க ஆட்சி செஞ்சா அ தி மு க வினருக்கு இருண்ட காலம். அ தி மு கா ஆட்சி செய்தா தி மு க வினருக்கு.

பா ம கவிற்கு அவங்க கூட்டணி ஆட்சியில் இல்லையென்றால் இருண்ட காலம்.

பாலா

said...

சீரியஸான விஷயங்களில் மக்களுக்கு களைப்பு தோன்றாமல் இருக்க சோ பாணியில் பேசி மொக்கை காமெடி செய்யும் பாலாவுக்கு நன்றிகள்.

said...

அனானியுடன் நடந்த கருத்து பரிமாற்றம் நன்றாக இருந்தது.

//சீரியஸான விஷயங்களில் மக்களுக்கு களைப்பு தோன்றாமல் இருக்க //

இல்லை.. சீரியஸான விஷயங்களில் விஷயமில்லாமல் மொக்கையாக பேசினால்தான் எரிச்சலும் களைப்பும் வரும். வந்தது.