Monday, July 24, 2006

வலைபதிவில் ஆர்ய கூத்து -2

பாகம் ஒன்று இங்கே

முதலில் இந்த மரபணு ரீதியிலான ஆராய்ச்சிக்கு கால நிர்ணயம் செய்ய முடியும் என்ற கூறியதையும் அதற்கு ஆதாரமாக காட்டப்பட்ட சுட்டியும் அதில் உள்ள விஷயத்தை பார்ப்போம்.......

//genetic admixture ஆகியிருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் எந்த கால கட்டத்தில் யார் வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்று கருதுவது சரி அல்ல. genetic evidences மூலம் மிகத் துல்லியமாக எந்த கால கட்டத்தில் எத்தகயவர்கள் வந்திருக்கலாம் என்பது தெளிவு பெற்றிருக்கிறது. அதில் நிச்சயம் 1500BCE ஆண்டு வாக்கில் குதிரை தேர் ஓட்டும் மத்திய ஆசிய ஆடு மாடு மேய்க்கும் நாடோடிகள் வந்ததாக எந்த சான்றும் இல்லை. ஓப்பன்ஹைமரின் Real Eve புத்தகத்தினைப் பார்க்க//..

//பல்லாயிரமாண்டுகளாக, யாருக்குமே தெரியாத அந்த படையெடுப்பை திடீர் என்று ஒருவர் அல்லது சிலர் சொல்ல எல்லோரும் எப்படி அதை ஆண்டவன் வார்த்தைகள் போல் நம்ப முடிகிறது என்பதைப் பற்றி யாராவது புன்னியவான் ஆராய்ச்சி செய்தால் தேவலாம்//

இப்படி கூறிக்கொண்டு இந்த சுட்டியை தருகிறார்.

http://www.channel4.com/science/microsites/O/origins/
media/docs/originsoppen.doc

இந்த சுட்டியில் கிடைப்பது இதுதான்...

Genetic branches, however, only have approximate dates; so the reconstruction of these ancient migrations has to be matched with archaeology, the dramatic effects of changing climate and natural geographic corridors and barriers.

Dating the Exodus is another matter. Increasing genetic evidence from East Asia and the Antipodes suggests the Exodus could be as old as 80,000 years, but the genetic dating method lacks precision. Here the archaeology may help me in my synthesis. A picture is growing of rapid spread of beachcombers round the Indian Ocean over land-bridges through Indonesia to Bali. 70,000 years ago a severe glaciation briefly locked up enough water to lower the sea level by 80 metres, taking the coast of Timor to within 100 miles of Australia. Archaeological evidence for the earliest occupation of Australia by modern humans suggests that this is the only time they could have got across.

துல்லியமாக என்கிறார் இவர். ஆனால் அவரோ குத்துமதிப்பாக மற்றும் தொல்லியல் ஆதாரங்களை வைத்துத்தான் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார். யார் இதில் பொய்யர்? யார் இதில் ஏமாளி?

********************

இன்னும் கொஞ்ச அறிவியல் ஜல்லியை அடுத்த பாகத்தில் கிளறிப் பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் கிளைக்கதைகள்....

மொழியியல் ஆராய்ச்சியை ஒரு hoax என்று கூறி உதறி தள்ளும் இவர் தமிழ் மரபை கேவலப்படுத்த சம்ஸ்கிருதத்தில் இருந்துத்தான் தமிழ் கிளைத்தது என்பது போன்ற ஒரு கருத்தை முன்னிறுத்துகிறார்.அப்படி இல்லை தமிழ் தனிமரபுதான் என்று கூறும் ஆட்கள் எல்லாம் இருமொழிகளையும் தெரியாதவர்களாக இருப்பார்கள் என்கிறார்.

நம் கண்ணை நாமே குத்திக்கொள்ளும் இது போன்ற கருத்துக்கள் தான் இவர்களுக்கும் நமக்கும் இருக்கும் அடிப்படை பார்வை வித்தியாசத்தை பறைசாற்றுகிறது.இவரை போன்ற ஆட்கள் ஹார்ட் போன்ற பேராசிரியர்களை படித்திருப்பார்களா? தமிழ் மொழி மரபு சம்ஸ்கிருத மொழியிடன் இருந்து வேறுப்பட்டது என்று தெளிவாக கூறும் ஹார்ட் சம்ஸ்கிருதம் படித்தபின்பு தான் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமி்ழ் இன்று செம்மொழி என்ற ஒரு அந்தஸ்தை பெறுவதற்கு இவரும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html

மேற்கண்ட கட்டுரையில் இருந்து சில வரிகள்...

First, Tamil is of considerable antiquity. It predates the literatures of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam,, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa's works by two hundred years.Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and vast intellectual tradition.

இவ்வாறு நமக்கென்று இருக்கும் மரபையும் பெருமையையும் ஆராய்ந்து அறிவிக்கும் பெரியவர்களையும் அரைவேக்காடுகள் என்று உதறி தள்ளிவிட்டு சம்ஸ்கிருதத்திற்கு காவடி தூக்கும் ஆட்களை அடிவருடிகள் என்று கூறினால் என்ன தவறு?

அறிவியல் சமாச்சாரங்கள் அதிகம் இருப்பதால் இந்த இடஒதுக்கீட்டு மூளைக்கு இவைகளை(மரபணு சமாச்சாரம்) படித்து புரிய அதிக நேரம் ஆகின்றது:)).ஆனாலும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகர்வது போல் இந்த விஷயங்களும் மெல்ல புரியத்தான் செய்கிறது. என்ன செய்வது?கிணற்றில் வீசி எறிந்துதான் முதலில் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்கள். இப்போதெல்லாம் நான் நன்றாகவே நீச்சல் அடிக்கிறேன்.

மரபணு சமாச்சாரத்தின் மிச்ச சொச்ச அறிவியல் ஜல்லியையும் குதிரையை வைத்து இவர்கள் ஆடிய கூத்தையும் அடுத்த பாகங்களில் பார்ப்போம்.

நன்றி: திரு.வஜ்ரா சங்கர்

நன்றி்:திரு.சன்னாசி


( மாற்று கருத்து உள்ளவர்கள் கடைசி பாகத்தில் தங்கள் பார்வையை வைக்கலாம்)

Saturday, July 22, 2006

வலைப்பதிவில் ஆரிய மாயை -1

ஆரிய திராவிட கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் சொல்லுவதாக சொல்லிக் கொண்டு உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களை விஞ்ஞானம் என்று ஒரு நண்பர் இங்கு எழுதினார். அதற்கு பல நண்பர்களும் எதிர் வினைகள் தந்திருக்கிறார்கள். இவைகளை தொகுத்து ஒரு ஆவணமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. அறிவியல் என்ற போர்வையில் ஜல்லியடிப்பதை அம்பலப்படுத்தும் முயற்சி இது.

முதலில் திராவிட கருத்தாக்கம் என்பது ஏதோ வலைப்பதிவில் இதுவரை இல்லாதது போலவும்,இப்போதுதான் இது புதிதாக வந்தது போலவும்,இது ஏதோ தீராத பகையை ஏற்படுத்தி இருப்பது போலவும் எழுதி இருப்பது நகைப்பிற்குரியது.நாட்டில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இந்த கருத்தாக்கத்தின் எதிரொலியை நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம்.

வித்தியாசங்களை பறைசாற்றி பறைசாற்றித்தான் நாம் நம் உரிமைகளை மீட்டெடுக்கவேண்டி உள்ளது. இங்கு வேண்டப் படுவது அங்கீகாரம்தான். பேசப்படுவதும் பிரிவினை அல்ல.

முதலில் அவருடைய ஒரிஜினல் கட்டுரையை பார்ப்போம். மரபணு சோதனை ரீதியாக, தொல்லியல் ரீதியாக மற்றும் வானசாஸ்திர ரீதியாக ஆரியர்கள் என்ற பிரிவு இல்லை என்று ஒரு கருத்தரங்கில் கூறினார்கள் என்கிறார்.

1. //Dr. Narahari Achar, a physicist from University of Memphis clearly showed with astronomical analysis that the Mahabharata war in 3,067 BC, thus poking a major hole in the outside Aryan origin of Vedic people.//

இந்த வாக்கியத்திற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை. சரியாக 3067 ல் தான் மகாபாரதம் நடந்தது என்று எந்த விஞ்ஞான விளக்கம் உள்ளது?

2. தொல்லியல் ரீதியாக என்று கட்டுரை ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதற்கு எந்த ஆதாரமும் கட்டுரையில் இல்லை.

3. மரபணு சோதனை என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்து ஜல்லியடிக்கப் பட்டுள்ளது.அதிலும் பீட்டர் என்பவர் இதை உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியாது என்று கூறியுள்ளதும் அதே கட்டுரையில் பதிவாகி உள்ளது. இந்த மரபணு சோதனை விவகாரத்தில் காலத்தை நிர்ணயிப்பதில் பல மாற்று கருத்துக்கள் உள்ளதாகத்தான் விஞ்ஞானிகள் கூறிகிறார்கள்.ஒரு மனதாக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்ட உண்மை அல்ல இது. ஆக இந்த மரபணு விஷயத்தில் நிரப்பப்படாத கட்டங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு மாற்றுப்பார்வை உள்ளது. இதை பின்னால் விளக்கமாக பார்ப்போம். இந்த கட்டுரையே இந்த மரபணு விஞ்ஞான புரட்டை பற்றி மட்டுமே சொல்கிறது. மற்ற தொல்லியல் ரீதியான எந்த ஒரு புதிய ஆதாரமும் ஆரியக்கூத்து ஆட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக நண்பரின் இந்த மூலக்கட்டுரையில் ஒன்றும் உருப்படியாக இல்லாததால் பின்னூட்டங்களை பார்ப்போம்.ஜயராமன் இந்த தியரி உடைந்துவிட்டதாக பிபிசி யிலேயே சொன்னார்கள் என்று அணில் பிள்ளை கணக்காக ஒரு சிறிய ஜல்லியை எடுத்து வீசியுள்ளார்.பிபிசி யிடம் விசாரித்ததில் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என்றுவிட்டார்கள்.அது ஜெயராமனுக்கு தெரியுமா? இதே பாணியில் பல ஜோக்குகள் உள்ளன. வெட்டிபயல் கால்கரி சிவா உள்ளிட்டோரின் கருத்துக்கள் அவற்றில் அடக்கம்.மிகவும் கீழ்த்தரமாக எழுதியுள்ள சி.டி உள்பட மற்ற அம்பிகளின் கருத்துக்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

சன்னாசி பின்னூட்டங்கள் மிகவும் சுவாரசியமானவை. மூலக்கட்டுரையில் உள்ள பீட்டர் என்பவரின் கருத்தையே முழு கட்டுரையையும் காட்டி சன்னாசி விளக்குகிறார்.

//He, however, put several caveats before interpreting genetic data, including "Y-ancestry may not always reflect the ancestry of the rest of the genome"// -

கவனிக்க - Several caveats அதாவது ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் விடாதீர்கள் மகாஜனங்களே என்று அர்த்தம்.

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததை உபயோகித்துக்கொண்டு வரலாற்றை மாற்றி எழுதும் இவர்களின் சித்துவேலை பல தளங்களில் பல்லிளித்து நிற்கிறது. இவர்கள் கொடுக்கும் அனைத்து சுட்டிகளின் தளத்தின் பெயரை பார்த்தாலே இது விளங்கும்.

*******************

அறிவியல்பூர்வமான முடிவுகளை பார்க்க விரும்புவோருக்காக வேறு ஒரு சுட்டியும் அதில் உள்ள தகவல்களும் http://www.genome.org/cgi/reprint/11/6/994

The origins and affinities of the 1 billion people living on the subcontinent of India have long been contested.This is owing, in part, to the many different waves of immigrants that have influenced the genetic structure ofIndia. In the most recent of these waves, Indo-European-speaking people from West Eurasia entered India fromthe Northwest and diffused throughout the subcontinent. They purportedly admixed with or displacedindigenous Dravidic-speaking populations. Subsequently they may have established the Hindu caste system and
placed themselves primarily in castes of higher rank. To explore the impact of West Eurasians on contemporaryIndian caste populations, we compared mtDNA (400 bp of hypervariable region 1 and 14 restriction sitepolymorphisms) and Y-chromosome (20 biallelic polymorphisms and 5 short tandem repeats) variation in 265males from eight castes of different rank to 750 Africans, Asians, Europeans, and other Indians. For maternallyinherited mtDNA, each caste is most similar to Asians. However, 20%–30% of Indian mtDNA haplotypesbelong to West Eurasian haplogroups, and the frequency of these haplotypes is proportional to caste rank, the
highest frequency of West Eurasian haplotypes being found in the upper castes. In contrast, for paternallyinherited Y-chromosome variation each caste is more similar to Europeans than to Asians. Moreover, theaffinity to Europeans is proportionate to caste rank, the upper castes being most similar to Europeans,particularly East Europeans. These findings are consistent with greater West Eurasian male admixture with castesof higher rank. Nevertheless, the mitochondrial genome and the Y chromosome each represents only a singlehaploid locus and is more susceptible to large stochastic variation, bottlenecks, and selective sweeps. Thus, to
increase the power of our analysis, we assayed 40 independent, biparentally inherited autosomal loci (1 LINE-1and 39 Alu elements) in all of the caste and continental populations (600 individuals). Analysis of these datademonstrated that the upper castes have a higher affinity to Europeans than to Asians, and the upper castes aresignificantly more similar to Europeans than are the lower castes. Collectively, all five datasets show a trend
toward upper castes being more similar to Europeans, whereas lower castes are more similar to Asians. Weconclude that Indian castes are most likely to be of proto-Asian origin with West Eurasian admixture resultingin rank-related and sex-specific differences in the genetic affinities of castes to Asians and Europeans.

இதையும் படிக்கலாம்.http://www.genome.org/cgi/reprint/13/10/2277

மரபணு அறிவியல்ரீதியாக பல மாற்றுப்பார்வைகள் இருப்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.


ஏற்கனவே பீட்டர் கொடுத்த தியரியில் பல உள்சிக்கல்கள்(உள்குத்தா இல்லீங்க உள்சிக்கல்) இருப்பதாக அவர் ஒத்துக்கொண்டுவிட்ட நிலையில் வஜ்ரா கொடுத்த ஆதாரமும் அடிபட்டுவிட்டது. இப்போது மேற்கண்ட இந்த அறிவியல் ஆதாரத்திற்கு வஜ்ராவிடம் மாற்றுப்பார்வை உள்ளதா?

ஆக பொதுவாக இதுபோன்ற சந்தேகத்துக்குரிய தியரிகளில் நாம் முடிவுக்கு வருவதற்கு பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். மொழியியல ஆய்வு, சமூகவியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு இத்தனை விஷயங்களை வைத்து வரவேண்டிய முடிவுக்கு வெறும் ஜல்லியடி முடிவை வைத்து எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.


தொடர்ந்து பேசும் சன்னாசியின் கூற்றைப் பார்ப்போம்.

அனைவரும் பூர்வகுடிகள் என்கிறீர்கள் உங்கள் பதிவில் - அனைவரும் இந்தியாவில் தோன்றிய பூர்வகுடிகள் எனில், அனைவரும் ஒரே founder populationலிருந்து கிளைத்து வந்தவர்களா? மனித இனம் ஆஃப்ரிக்காவிலிருந்து கிளைத்து வந்தது உண்மை எனில், இந்தியாவில் உள்ள எவருமே நீங்கள் சொல்வதுமாதிரியான பூர்வகுடி கிடையாது - எவரெவர் எவ்வளவு காலத்துக்கு முன்பு வந்தவர்கள் என்பதைப்பற்றிய ஒரு உத்தேசமான குறிப்பை வேண்டுமானால் மரபியல் ஆராய்ச்சிகள் மூலம் பெறலாம். இல்லை, இப்படி ஏதாவது இரண்டு சுட்டிகளைக் கொடுத்து, 'அறிவியல்பூர்வமாக' என்று தான் நினைப்பதைச் சொல்வதுதான் உங்கள் உத்தேசமென்றால் அதற்குமேல் உங்கள் இஷ்டம். உலகத்திலுள்ள வேறுபட்ட ஜனத்தொகைகளிலுள்ள மரபியல் ரீதியிலான வேறுபாடுகளைத் தொகுக்க அமைக்கப்பட்ட Hapmap அமைப்பிலும், Human Genome Projectலும், இந்தியாவின் மக்கட்தொகையிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட பிரிவும் சேர்க்கப்படவில்லை - நைஜீரியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பாவிலுள்ள கிட்டத்தட்ட 'homogeneous' என்று கருதப்படும் ஜனத்தொகைகள் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டன. இதன் பிரதான நோக்கம், மனிதர்களின் மூலத்தை ஆராய்வதைவிட மரபியல் குறிப்பான்கள் மூலமாக நோய்க்கூறுகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவுவதே. இந்தியாவில் தற்போது இதே ரீதியில், இந்திய மக்கட்தொகையின் மரபியல் வேறுபாடுகளைத் தொகுக்க HGDV என்ற ஒரு முயற்சி தொடங்கியிருக்கிறது. இந்திய ஜனத்தொகை ஒரு genetically heterogeneous population, நீங்கள், நான் உட்பட எந்தப் பிரிவுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் தனிநபரும் ஒரு 'குறிப்பிட்ட' பிரிவிலிருந்து வந்தவர் இல்லை. தற்போதைய இந்தியா என்னும் புவியியல் ரீதியிலான வரையறைக்குள் உள்ள ஜனத்தொகை வெவ்வேறு காலகட்டங்களில் துணைக்கண்டத்தின் உள்வந்த பிரிவினரால், அவர்களின் கலப்பினால் உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை - இதில், தற்போதைய சமுதாயத்தை முன்வைத்து எந்தக் கருத்தாக்கத்தை நிரூபணம் செய்ய அறிவியல் முடிவுகளை உபயோகிக்கிறீர்கள் என்பதை விமர்சிப்பதும் அவசியம். அப்படி ஒருவேளை இல்லாமலிருந்து, வட இந்தியாவிலிருப்பவர்கள், வடகிழக்கிலிருப்பவர்கள், தென்னிந்தியர்கள், தென்னிந்திய, வட இந்தியர்களுக்கு உள்ளிருக்கும் பழங்குடிகள் அனைவரும் ஒரே founder populationலிருந்து வந்தவர்கள் என்று கூறுவதுபோலத் தோன்றும் உங்கள் கருத்தாக்கத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டுமானால் (குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவேண்டுமானால்), அதற்கு மேற்கண்ட உங்கள் விஸ்தாரமான தீர்ப்புகளைச் சுட்டும்/ஆதரிக்கும் பிரசுரங்களை/ஆதாரங்களைத் தருக, தெரிந்துகொள்கிறேன். அனைத்துத் தளங்களிலும் ஆரியக் கலாசாரம் என்ற கருத்தாக்கம் ஒருகாலத்தில் சௌகரியமாக இருந்தது (குறைந்தபட்சம் அப்படியொரு கருத்தாக்கம் இந்தியாவில் இருந்தது/இருக்கிறது என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களென்று நினைக்கிறேன்), அதை எதிர்த்து 'திராவிட' என்று ஒருவகையில் அதே பாணியிலான கருத்தாக்கங்கள் வரத்தொடங்கும் காலத்தில் கௌரவமான பின்வாங்கலுக்கு/சாதுர்யமான எதிர்ப்புக்கு/ஒருமுகப்படுத்தல் முயற்சிக்கு மட்டும் அறிவியல் என்னும் தளம் தேவைப்படுகிறது எனில், அதை ஒப்புக்கொள்ளமுடியுமென்று தோன்றவில்லை.

இதுவரை ஆழ்ந்து நீங்கள் படித்திருந்தீர்கள் என்றால் வஜ்ராவின் ஜல்லியை சன்னாசி எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப்பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும். இன்று இருக்கும் இந்திய மக்கள் பல்வேறு சமயங்களில் இந்தியாவில் குடியேறிவர்கள் என்றும் வஜ்ரா கூறுவது போல் அனைவரும் பூர்வகுடிகள் என்று கூறுவதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்.

வஜ்ரா கூறும் அனைவரும் பூர்வகுடிகள் என்பது ஜலலி என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக அமைகிறது. ஏனென்றால் இந்துத்வா தளத்தில் உள்ள ஒரு கட்டுரையை சுடுகிறார். பதிவு போடுகிறார். பொத்தாம்பொதுவாக அனைவரும் பூர்வகுடிகள் என்கிறார்.அவ்வளவுதான்.

founder population என்ற கான்செப்ட் என்றால் அதற்கான ஆதாரத்தை தர முடியுமா என்று சன்னாசி கேட்டதற்கு வஜ்ரா கூகிளாண்டவரிடம் சரணடைந்து பெற்ற இன்னொரு சுட்டிதான் இரண்டாவது கட்டுரை.அதையும் அடுத்த வாரம் அலசுவோம்.

(குறைந்தது இன்னும் மூன்று பாகங்கள் வரலாம்.மாற்று கருத்து இருப்பவர்கள் அனைத்து பாகங்களும் வந்தப்பிறகு பதில் தரலாம்)

நன்றி: திரு.வஜ்ரா சங்கர்

நன்றி:திரு.சன்னாசி

Friday, July 07, 2006

நம் தெய்வங்கள்

நண்பர்களே,

நாம் வாழ்தலின் அர்த்தம் நமது வாழ்க்கையை, அதன் முறையை, வரலாற்றை நமது சந்ததியினருக்கு கொண்டு செல்வதில் இருக்கிறது. அதற்கு நம்மைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லை என்றால் நம் வரலாறு நம் வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களற்ற மேதாவிகளின் அலட்சிய கணிப்புகளாகவோ அவர்களின் விருப்பத்திற்கேற்ப புனையப் பட்ட வரலாறாகவே அமைந்துவிடும். அது ஆபத்தும் அபாயகரமானதும் ஆகும். நம் கண்களை நம் கைகளைக் கொண்டே குருடாக்கும் யுக்தி அது.

அதற்குத்தான் நண்பர்களின் துணையோடு வேர்களை அடையாளம் காணும் ஒரு சிறு முயற்சியில் இறங்க எண்ணி இருக்கிறோம். நீண்ட பயணத்தின் முதல் அடியை இங்கிருந்து தொடங்குவோம்.

தமிழரின் பண்பாடு, நம்பிக்கைகள் யாவும் இயற்கையைச் சார்ந்தது. வீரமும், காதலும், அறமும் நிரம்பியது. இயற்கையே தமிழரின் முதல் கடவுள். இயற்கையின் வடிவங்கள் மீது நம்பிக்கை கொண்ட எளிமையான வழிபாட்டுமுறை.

அடுத்தப்படியாக குலதெய்வ வழிபாடு. வழிபாடு என்பதை சரணடைதல் என்றும் பொருள் கொள்ளலாம். நினைவு கூர்தல், நன்றி கூர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். தமிழர்களின் பொதுவான வழிபாட்டிலும், குலதெய்வ வழிபாட்டில் சரணடைதல் என்ற தத்துவத்தை விட நினைவுகூர்தல், நன்றி கூர்தல் என்பதே முதன்மை பெறுகிறது.அதே போல குலதெய்வங்கள் என்றழைக்கப்படுவோர்கள் இந்த மண்ணில் பிறந்து தான் பிறந்த குழுக்காக, குடிக்காக வாழ்ந்து மறைந்தவர்களே. தங்களை வழிநடத்திய மூதாதையரை நினைத்து, அவர்கள் காட்டிய வழியில் தங்கள் வாழ்க்கையை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அமைத்து கொள்வதென்பதே இவ்வழிபாட்டின் அடிப்படை. இந்தச் செய்திகள் கல்வெட்டுகள், நடுகற்கள் எனப்பல வழியாக பதியப்பட்டிருக்கிறது.

அதே போல தொடக்கத்திலிருந்த வழிபாடு முறை அதே வடிவில் பின்பற்றப் படாமல் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் சமூகத்தின் உள்ளும் புறமும் என இரு சூழல்களிலும் நடந்தது. வலிமையுடை யோரரின் ஆதிக்கம் வலிமை குன்றியோரின் மீது திணிக்கப்பட்டது. வலிமையின் காரணமாக வளங்கள் சுரண்டப்பட்டன. உரியவர்கள் தனது சொந்த உடமைகள் இழந்து ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டனர். இந்த திணிப்புகள் நுட்பமாக நம்பிக்கைகளாக உருமாற்றமடையவைக்கப்பட்டது. வெல்ல முடியாத நம்பிக்கைகள் உட்செரிக்கப்பட்டன. அவைகள் அந்நியமாக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு இயல்பான பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டன. தொடர்ச்சியான இந்த உருமாற்றங்களினால் தனது ஆதிப்புள்ளியிலிருந்தும் தனது ஆதி நம்பிக்கையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மரபின் காரணமாக எச்சமாக ஒட்டியிருக்கும் ஆதி உணர்வுகளே இன்றைய மனிதர்களின் குலதெய்வ நம்பிக்கைகளின் வேர்.

வரலாற்றில் வேத நாகரிகத்திற்கு முந்தைய நாகரீகம் திராவிட நாகரீகம். நாகர்களின் நாகரீகம். அதாவது நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து நாகரீகத்தின் கல்கோடாரி) கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ்குடி என்பதை மிகச் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது. அதே போல கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழகத்தின் அரசு என்பது பல்வேறு கைகளில் இருந்திருக்கிறது. தொடர்ச்சியான பல படையெடுப்புகளும் போர்களும் நடந்திருக்கிறது. இவைகள் மிகக்குறைந்த அளவிலே வரலாறாக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு செய்திகளும் முறையான ஆவணப்படுத்தலாக இல்லாமல் பரம்பரை பரம்பரையாக முன்னெடுத்து வரப்பட்ட நம்பிக்கைகளிலே உயிர் வாழ்ந்திருக்கிறது. அந்த மரபு சங்கிலித் தொடர்ச்சியை இன்றைய வேகமான உலகியல் வாழ்வு உடைத்து சிதைத்தழித்து விட்டது. நாம் நம்மைப்பற்றிய தகவல்களற்று, அவை பற்றிய பிரஞ்னை இன்றியே வாழத் தலைப்பட்டு விட்டோம். அந்த தேவைகள் இன்றய சூழலின் நெருக்கடி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவருகிறது. இன்றைய தலைமுறை பெரும்பாலும் ஒரு இயந்திரத்தன நிலைக்கு வந்துவிட்டது. இயக்கம் இயந்தரதனமாகவும் சிந்தனை பொருளியாதாரத்தை முதன்மைபடுத்தியதாகவும் வளரத்துவங்கிவிட்டதால் வரலாறுகள் அழிந்துவருகின்றன. அதே நேரம் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் நம்பிக்கைகள் முன்பைப்போலவே பொதுமைப்படுத்தப்பட்ட வரலாறாக திணிக்கப்படுதலும் வேகமாக நடக்கின்றன.

ஆகவே நமக்குத் தெரிந்த நமது வரலாறுகளை ஆவணப்படுத்துவோம். நம் ஒவ்வொருவருக்கும் வரலாறு உண்டு. நம் நம்பிக்கைகளின் மூலங்களைத் தேடுவோம். ஒவ்வொருவரின் குலதெய்வத்திற்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது.அவற்றை பதிவு செய்வோம். பகிர்ந்து கொள்வோம்


ஆகவே தமிழ் அன்பர்கள் அனைவரும் தங்களின் குலதெய்வத்தின் வரலாறாக இருந்தாலும் சரி, தங்கள் ஊரில் உள்ள புகழ்பெற்ற தெய்வமாக இருந்தாலும் சரி, அதன் வரலாற்றை சுவையாகவும் வரலாற்றுபூர்வமாகவும் எங்களுக்கு எழுதினால் இங்கு பிரசுரிப்போம்.வருங்கால சந்ததியினருக்கும் நம் வரலாற்றை அது என்றும் சொல்லும்

.

Monday, July 03, 2006

ஒரு சிறிய அறிவிப்பு

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.நமது குழுமத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பதை தாண்டி விட்டது. அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் உள்ளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே நாம் கூறியிருந்தபடி நல்ல பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். பல நண்பர்களும் விவாதங்களில் ஊக்கத்துடன் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

பல நண்பர்களுக்கு இயக்கத்தில் ஆர்வம் இருந்தாலும் தள்ளி நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அவர்களை குழுமத்தில் சேருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்கனவே குழுமத்தில் உள்ள நண்பர்களும் புதிதாக குழுமத்தில் சேர விரும்பும் நண்பர்களும் தங்களது வலைப்பதிவுகளின் உரலை இந்தப்பதிவில் அளித்தால் அனைவருக்கும் குழுமத்தின் பதிவில் இருந்து இணைப்பு கொடுக்க ஏதுவாக இருக்கும். ஆகவே இந்த பதிவில் இயக்க நண்பர்கள் தங்களது வலைப்பூ முகவரி அளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விருப்பம் உடைய நண்பர்கள் தங்கள் தளத்தில் இருந்து குழுமத்தளத்திற்கு தொடுப்பு தரலாம்.

நன்றி.

கமலாதாஸ் பிரபாகரனைப்பற்றி

கேள்வி: "உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்?"

கமலா: "அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்த போது அந்த அமைப்புடன் எனக்கு நிறையப் பழக்கம் இருந்தது.

பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் போராளிகளுக்கும், சுயநலங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதை விட, ஏன் எடுத்தார்கள் என்கிற காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேன்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி."

02-07-௨006 ஆனந்த விகடன் இதழில் இடம் பற்ற மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் அவர்களின் பேட்டியில் இருந்து ஒரு பகுதி.