அறிவியல்ரீதியாக ஆரியர்கள் என்ற பிரிவே இல்லை என்று கூறும் இந்துத்வாவாதிகள் வேதங்களை மட்டும் நம்புவதை விட்டுவிட்டு இன்று அறிவியலையும் நம்புவது நல்ல முன்னேற்றம்தான் என்றாலும் அறிவியலை திரிப்பது கண்டிக்கப்படவேண்டிய போக்கு. ஆகவே இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று வஜ்ரா கூறிய புரட்டுக்களுக்கு சன்னாசி அவர்களின் கூறிய பதில்களை ஆவணப் படுத்தும் நோக்குடன் நாம் எழுதும் தொகுக்கும் தொடரின் மூன்றாம் பாகம் இது.
பாகம் 1
பாகம் 2founder population உள்பட மற்ற கருத்துக்களைப்பற்றி வஜ்ராவின் பதிவில் சன்னாசி...
//இடப்பெயர்வு என்பதை நீங்கள் கற்பனைசெய்யும் / யூகிக்கும் / உங்கள் வாதங்களை முன்வைக்க உபயோகிக்கும் magnitude எவ்வளவு இருக்கமுடியும் என்பதைக்குறித்து, வெகு சிறு குழுக்கள் தற்காலத்தைய ஒரு புவியியல் வரையறைக்குள் அடங்கிய பிரதேசத்தின் genetic poolல் எவ்வளவு தூரம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும் என்பது ரீதியிலான சாத்தியப்பாடுகளைக்குறித்து வெகு எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கோணத்தில் யோசிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. மேற்கண்ட உங்கள் ஆங்கில வாக்கியத்தில் குறிப்பிடப்படும் 'second migration' என்பது எந்த வரையறைக்குள் என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு புவியியல் ரீதியான தற்போதைய இந்தியா அமைந்திருக்கும் இந்தியத் துணைக்கண்டத்தில் n இடப்பெயர்வுகள் நிகழ்ந்திருப்பதாகக் கொண்டால், அந்த 'இந்தியா' வுக்குள் நிகழ்ந்துள்ள வெகு சமீபத்திய பெரும் இடப்பெயர்வு (மரபியல் ரீதியிலான) என்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளோரின் இடப்பெயர்வைக் குறிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் காணமுடியும் - முன்பு நான் குறிப்பிட்டிருந்த சில பிரசுரங்களிலேயே இதைக்குறித்து மேலும் விபரங்கள் உள்ளன - தேவைப்படின் மறுபடி முழுதாகப் படித்துப் பார்க்கவும். புவியியல் ரீதியிலான வரையறைகள் இல்லாத காலங்களில் நிகழ்ந்த மனித இடப்பெயர்வை அளக்க உதவும் அறிவியல் முடிவுகளைத் தற்காலப் (இந்தியக் கணக்கெனில் 1947 - இது நாட்டுக்கு நாடு வேறுபடுமென்று நான் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை) புவியியல் வரையறைக்குள் பொருத்திப் பொதுப்படையாக தீர்ப்புக்கூறுவது சரியில்லை என்பது என் அபிப்ராயம் - உங்களது பதிவிலும், பின்னூட்டங்களிலும் நீங்கள் செய்துள்ளது அதுவே என்றுதான் குறைந்தபட்சம் எனக்காவது படுகிறது. உதாரணத்துக்கு 'இந்தியா' என்று அப்போதிருந்து, குறைந்து பெருகித் தற்போதைய புவியியல் வரையறைக்குள்ளிருக்கும் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலும் கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்த காலங்களில் நடந்த கிரேக்கப் படையெடுப்புகளிலும், பிற்காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பிலும் அதன்பின்பு ஐரோப்பியப் படையெடுப்புக்களிலும் எந்தவிதமான இனக்கலப்பும் நடந்திருக்கமுடியாது - அப்படி இனக்கலப்புக்கள் நடக்காமல் உறுதியான வேலிகள் போட்டு மட்டுறுத்தப்பட்டிருக்கும் என்று நீங்கள் கூறுவதைப்போல இருக்கிறது இது - இது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு விஷயம் - இந்த ரீதியில் ஒரு பிரதேசத்தின் gene pool குறித்த ஆராய்ச்சிகளை அணுகுவது அறிவியல் ரீதியாக எந்த அடிப்படையும் இல்லாத ஒன்று. Haplotype blocks எனப்படும் அளவுகோல்கள் மூலமும் இவற்றை அணுகமுடியும் //
//ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறிய மக்கள், அப்போதிருந்த ஆஃப்ரிக்க மக்களின் முழு மரபியல் கூற்றுக்களையும் எடுத்துச்செல்லவில்லை - அப்போது நிகழ்ந்த population bottleneck மூலம் வேறு பிரதேசங்களுக்குப் பெயர்ந்த மக்களின் தொகை மொத்த மக்கட்தொகையில் ஒரு சிறு பங்கு மட்டுமே என்பதால், அப்படி இடம்பெயர்ந்து உலகின் பிற பகுதிக்குப் பரவியவர்களது genetic diversity, ஆஃப்ரிக்காவில் மிஞ்சிய (தற்போதும் இருக்கும்) மக்களது genetic diversityயைவிடக் குறைந்ததாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது, நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறது என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்திய gene poolல் இந்த ரீதியிலான ஆராய்ச்சிகள் பிற ஜனத்தொகைகளுடன் ஒப்பிட்டு பெருமளவு செய்யப்படவில்லை //
// ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறித் தெற்கு ஆசியாவுக்கு ஜனத்தொகை வந்து, பின் பல திசைகளில் கிளைபரப்பியதாக நீங்கள் சொல்லும் ஒப்பன்ஹைமர் போன்றவர்கள் குறிப்பிடும் காலம் கிட்டத்தட்ட 50,000 வருடங்களுக்கு முற்பட்டது (உங்களது plesitocene குறித்து விளக்கும் விக்கிப்பீடியா சுட்டி உட்பட). இது தெரியாமல் அதிகபட்சமாக சென்ற நூற்றாண்டின் மத்திக்குச் சற்று முன்பாகத் தொடங்கிய 'திராவிட' என்ற கருத்தாக்கம் எதிர்க்கத்தொடங்கியது, பாலகங்காதர திலகர் போன்றவர்களும் முன்வைத்த 'ஆரியத் தாய்ப்பிரதேசம்' என்னும் நெகிழ்வான, பெரிதும் ஊகங்களின் அடிப்படையிலான கருத்தாக்கங்களின் அடிப்படையில்/அவை திரிக்கப்பட்டு, பிரதேசத்துக்கு ஏற்றமாதிரி வெவ்வேறு குழுவினரால் நிறுவப்பட முயற்சித்த மேலாண்மைக் கருத்தாக்கங்களை எதிர்க்க உருவானவை என்ற அளவிலே எடுத்தால், அறிவியலுக்கு இடமில்லை அங்கே. இதிலே 'ஆரியர்கள் 4,500 வருடம் முன்பு கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்' என்ற வாதம் அடிபட்டுப் போகிறது என்று நீங்கள் 'அறிவியலை'த் துணைக்கழைக்கிறீர்கள் - அப்போது 50,000 வருடங்கள் முன்னால்தானே ஆஃப்ரிக்காவிலிருந்து ஜனத்தொகை இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்ததாக நீங்களே துணைக்கழைக்கும் ஒப்பன்ஹைமர் போன்றவர்கள் சொல்கிறார்களே, மில்லியன் கணக்கில் வம்சாவழியினர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கும் தனிமனித/சிறு குழுவின் இனப்பெருக்க சாகசங்கள் போல 'ஆரியர்கள்' 4500 வருடங்களுக்கு முன்பு சாகசங்களை நிகழ்த்தியிருக்கக்கூடாதா, இதுவரை அது கண்டுபிடிக்கப்படாமலிருந்து, இனிமேல் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் இது அது என்று அறிவியலை ஒரு சாதாரண ஃபுட்பால் மாதிரி வைத்துக்கொண்டு திசையெல்லாம் உதைத்துக் குதர்க்கவாதம் பேசலாம் - இவ்வளவு தூரம் தலையை உடைத்துக்கொண்டு அவனவன் ஆராய்ச்சி செய்வதும், phrenology, eugenics என்று வெள்ளை இனமேலாண்மைவாதம் பேசித் திரிந்து, The Bell Curve என்று 'நடுநிலைமைவாத' ஆராய்ச்சியாளர்களால் அரைவேக்காட்டுத் தனமாய் எழுதப்பட்ட புத்தகங்களை சமகால அறிவியல் ஒரு larger pictureல் நிராகரித்து, சமூக நோக்கில் தனது முடிவுகளை எடுத்து வைத்துத் தன் திசையைச் சீர்படுத்த முயற்சிக்கும் இக்காலத்தில் தன்னிஷ்டத்துக்கேற்ப முடிவுகளை வளைத்தும் திரித்தும் விளையாடுவதுதான் ஒரே நோக்கம் என்றால் அது அவரவர் விருப்பம்//
// திரிக்கவேண்டுமெனில், இந்த population genetics ஆராய்ச்சிகள் simulations போன்றவற்றை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன, Natureக்கு அனுப்பவேண்டுமா அல்லது American Journal of Human Geneticsக்கு அனுப்பவேண்டுமா என்பதைப்பொறுத்து எந்தவிதமான FDR adjustment செய்யவேண்டும், sample size இருக்கவேண்டும் இன்னபிற என்பதையெல்லாம் வைத்தும், வெகு கீழிறங்கி வந்து impact factor-mania எவ்வளவு தூரம் பிடித்து ஆட்டுகிறது என்பது வரை குதர்க்கவாதம் பேசிக்கொண்டிருக்கலாம் - இல்லை இதையும் ஒரேயடியாய் hoax எனலாம், நீங்கள் சொன்னமாதிரி பெரும்பாலான மொழியியல் ஆராய்ச்சிகள் hoax என்பது உண்மையாய் இருந்தால் ;-). //
மேலும் வஜ்ராவின் "எல்லோருமே, பூர்வீகக் குடிகள் தான் என்பதைத் தான் இந்த புதிய ஆராய்ச்சி சொல்கிறது." என்ற கருத்துக்கு பதிலளிக்கும்போது
//Sharing a haplotype/genotype with other populations in the world doesn't mean that your forefather(s) and the other population's forefather(s) (don't get it mixed up with the primordial archetype here, we're talking about 'modern man' ;-)) are/were 100% genetically identical. Your conclusions imply such a notion, which is untrue. Read through it again, in case you haven't already. You can search for the definitions of a 'founder population', and try to answer my question in context. The answer is NO.
The present gene pool of India is not from a single founder population - there has been admixture at various levels at various times. If you refuse this, then what about the Muslims you're so caustic against? Do you mean that me, you, some Ahmed Rashid and Masthan Wali were created from the same founder population? Can you assure that there has been no admixture between the invading Muslims and Hindus? Of course we might share some haplotypes that indicate our ancestry, but that doesn't mean that we're 100% genetically identical. Founder population is not an 'Adam and Eve who created the whole world' kind of setup - I apologize in case I haven't made it clear (which I thought, did not need elaborate explanation) - if your arguments stem from that perspective, then we probably have to humongously backpedal to apes and beyond. If it ultimately boils down to 'all of us humans came out of Africa, let's settle at that - why are we arguing then?'//
//Furthermore, this specific distribution of mtDNA varieties in India compared with the distribution observed among Mongoloids and the Caucasoid populations of western Eurasia (Figure 1) is, at present, best explained by two separate late Pleistocene migrations of modern humans to India. One of them, possibly arriving by the Southern route, brought to India an ancestral population carrying haplogroup M and was spread further eastward. The second migration brought the ancestors of haplogroup U. Although the admixture of these major waves started perhaps very early - explaining the spread of these major mtDNA varieties all over the subcontinent - it is likely that it happened after the carriers of haplogroup M found their way further east, explaining the absence of haplogroup U lineages among Mongoloid populations studied so far. //
கார்னர் செய்யப்பட்ட வஜ்ரா இப்படி முடிக்கிறார். "There is no proof with Genetics that at 1500 BC there was a genetic admixture of any kind....."
நாமும் அதைத்தான் சொல்கிறோம்."There is no proof with genetics that at 1500 BC there was not a genetic admixture of any kind...."
அறிவியல் இல்லாத கருத்தாக சன்னாசி கூறும் இவ்விஷயமும் குறிப்பிடத் தக்கது.
//திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் மரபியல் ரீதியாக எதையும் நிரூபித்து (குறைந்தபட்சம் நிரூபிக்க முயன்று ஆரியர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும் அக்கருத்தாக்கம் தொடங்கிய காலகட்டத்தில் மரபியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், அதையும் இங்கே சொல்லிவிடலாம் ;-)) நீங்கள் குறிப்பிடும் 'ஆரிய எதிர்ப்பை'த் தொடங்கவில்லை, 'பிரித்தாளும் சதி'யைத் தூண்டவில்லை. 'ஆரிய' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிரிவினரின் குறிப்பிட்ட சில வழிமுறைகளை அங்கீகரிக்க விரும்பாத சமூக எதிர்வினையின் அடையாளமாகத்தான் 'திராவிட' என்னும் அடையைப் பார்க்க முடிகிறது //
நாம் முன்னமே கூறியது போல இதுபோன்ற விஷயங்களில் மொழியியல ஆய்வு, சமூகவியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு இத்தனை விஷயங்களை வைத்து வரவேண்டிய முடிவுக்கு வெறும் ஜல்லியடி முடிவை வைத்து எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.
இந்துத்வாவாதிகளை நாம் கண்டிப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அறிவியல் ஜல்லியை அடிக்கும்போது இலைமறைக்காயாக இவர்கள் தமிழையும் தமிழின் பெருமையையும் குலைத்துவிட்டு போவார்கள்.சம்ஸ்கிருதம் தான் தமிழைவிட உயர்ந்தது என்ற கருத்தை நுணுக்கமாக இவர்கள் செய்வதன் நோக்கம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
கடந்த பாகத்தில் தமிழின் தொன்மையைப்பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.இப்போது ஐராவதம் மகாதேவன் கட்டுரையில் இருந்து கொஞ்சம்....
இந்திய நாட்டில் இலக்கிய வளமும் தொன்மையும் உள்ள மொழிகள் இரண்டே தான்: சம்ஸ்கிருதமும் தமிழும். ஆகையால்தான் மத்திய அரசின் அண்மை அறிவிப்பு இவ்விரு இந்திய மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகளென அங்கீகரித்துள்ளது. இவற்றுள் சம்ஸ்கிருதம் வேத காலத்திலிருந்தும், தமிழ் சங்க காலத்திலிருந்தும் நமக்குக் கிடைத்துள்ளதால், சம்ஸ்கிருதம் தமிழைவிடப் பழமையானது என்று இன்று கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் பொதுவான ஒரு கருத்து உலக அறிஞர்களிடையே நிலவுகின்றது.
ஆயினும் வேதங்களிலேயே திராவிட மொழிச் சொற்கள் காணப்படுவதாலும், இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இன்றும் திராவிட மொழிகள் (ப்ராகூய், குருக், மால்தோ) பேசப்பட்டு வருவதாலும், சிந்துவெளிப் பண்பாடு திராவிட மக்களால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை உலகின் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதாலும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் இந்தியாவின் மிகத் தொன்மையான முதல் செவ்வியல் மொழி என்ற பெருமைக்கு உரித்தாகிறது.
இனி குதிரையை வைத்து இவர்கள் ஆடிய கூத்தையும் அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையில் இருந்து சில தகவல்களையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)