Monday, January 22, 2007

"திராவிடம்" - தேவையா?

//You people aim to stand up for Tamizhans fine. But why the hell you chose "Dravidian" name along with that. Do you want to include people like Kannadigas? Do you know Kannadiga's opinion about Tamizhians? I don't understand why you should standup for people who themself don't say they are Dravidians.//

நமது பதிவு ஒன்றில் முரளி என்ற நண்பர் இட்ட பின்னூட்டம் இது. நம் குழு மீது ஆர்வம் காட்டி பல நண்பர்களும் இதே கேள்வியை மின்னஞ்சல் மூலமும் நேரிலும் கேட்டிருக்கிறார்கள். சமீபத்தில் பேராசிரியர் சுப.வீ. அவர்களின் நேர்காணல் ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. நண்பர் முரளி மற்றும் ஏராளமானோரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சுப.வீ. பதிலளித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இது குறித்த விரிவான விவாதம் நண்பர்களிடையேயிருந்து வரவேற்கப்படுகிறது.

பேராசிரியர் சுப.வீ.யின் கருத்து :

பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.

சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.

13 comments:

Anonymous said...

தங்களது கேள்விகளுடன் விவாதிக்கும் முன் சில அடிப்படை சந்தேகங்கள்

திராவிடம் பிறப்பால் அமைவதா?
இருப்பால் அமைவதா?
கொள்கை பற்றுதலால் அமைவதா?

தெளிவு படுத்தவும்.

பார்ப்பனீயம் என்றால் அடக்குமுறை உள்ள அடுக்குமுறை சாதீய அமைப்பை குறிக்கிறீர்களா இல்லை பிராமண சாதியை மட்டும் குறிக்கிறீர்களா?

தெளிவு படுத்தவும்

திராவிடம் என்பது வெறும் எதிர்ப்பு நிலை கோஷங்கள் கொண்ட அமைப்பு மட்டுமா இல்லை தன்னிலையில் சித்தாந்தங்களையும் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதா?

தெளிவு படுத்தவும்

said...

அன்பு அனானி!

திராவிடம் பற்றிய தங்கள் தேடுதல்களுக்கு நன்றி!

//திராவிடம் பிறப்பால் அமைவதா?
இருப்பால் அமைவதா?
கொள்கை பற்றுதலால் அமைவதா?//

மூன்றிலுமே அமைவது உண்டு.



//பார்ப்பனீயம் என்றால் அடக்குமுறை உள்ள அடுக்குமுறை சாதீய அமைப்பை குறிக்கிறீர்களா இல்லை பிராமண சாதியை மட்டும் குறிக்கிறீர்களா?//

அடக்குமுறை சாதீய அமைப்பே.



//திராவிடம் என்பது வெறும் எதிர்ப்பு நிலை கோஷங்கள் கொண்ட அமைப்பு மட்டுமா இல்லை தன்னிலையில் சித்தாந்தங்களையும் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதா?//

திராவிடத்துக்கு சித்தாந்தம் உண்டு. தந்தை பெரியாரின் புத்தகங்களை வாசிக்கவும்.

said...

"பார்ப்பனீயம் ஒரு குப்பை" என்று பாலா என்பவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களை ஆபாசமாக அவரது பின்னூட்டம் வசைபாடுவதால் அப்பின்னூட்டம் மட்டுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது.

Anonymous said...

Friends,
I guess my comment has kindled a thought for you people to publish a post. I welcome this.
I was expecting a strong answer,whereas to be honest, the reply sound very childish for me. Might be at the point of time when Periyar founded the movement, it was Madras presidency and no linguistic seperation didn't happen. So he would have opted name Dravidian. Now I find this name unappropriate. Even by Periyar's own words "Please think over what I said and accept. There is no necessity to accept just because it is my words".
Secondly, from schools we are taught like the word Dravidian include Tamil, Telugu, Kannada, Malayalam and Tulu people. Once anybody crosses TN and goes karnataka or Andhra he will find a surprise whereby those people wouldn't identify themselves as Dravidian and they totally refuse our theories. This irony makes anybody to feel all people coining word Dravidian are not just fair enough.
Finally, in this web world where you are spreading your thoughts, you don't need any words from Periyar just for identity sake. Any identity will be understood in full manner.
I have several criticizms, which I wanted to start with the title first. Let me ask those seperately once this discussion is over.
Murali.

Anonymous said...

//திராவிடம் பிறப்பால் அமைவதா?
இருப்பால் அமைவதா?
கொள்கை பற்றுதலால் அமைவதா?//

மூன்றிலுமே அமைவது உண்டு.

Will you accept marwaris and jains
who live in Tamil Nadu for generations as Dravidas.
Will you accept brahmins whose
mother tounge is Tamil as Dravidas/
Tamils/Dravida Tamils

Anonymous said...

திராவிடத்துக்கு சித்தாந்தம் உண்டு. தந்தை பெரியாரின் புத்தகங்களை வாசிக்கவும்.

1,Only that... or.
2,Aryan Invasion theory was
prevalent then but now it is
discarded.So where do you
stand on this.

said...

அன்பு முரளி!

மொழி அடையாளத்தை நாம்மறக்கவும் இல்லை. இழக்கவும் இல்லை.

அதே வேளையில் இன அடையாளத்தை மறக்கச் சொல்கிறீர்களா?

உலகின் மூத்த குடி என்ற பெருமை திராவிட இனத்துக்கு உண்டே? அந்தப் பெருமையை சுமந்துகொள்ள நாம் அருகதையற்றவர்கள் என்று கருதுகிறீர்களா?

சமூகநீதிக் களத்தில் திராவிடன் என்ற சொல்லினை பயன்படுத்துவது கொஞ்சம் வசதியாக நம்மால் உணரமுடிகிறது அல்லவா?

Anonymous said...

My dear friend,
I could feel grave contradiction in your theories for your title now.
When I first posted comment I was given answer like the term Dravidian is used in a context where it means "opposition to pervailing ruling castes". Whereas now I am getting answer like it is the name of race you belong to.
Either way I have again some questions. If you are using just for symbolism against ruling castes you don't need such identity. Our web people can very well understand even if you write in name for example say "X iyyer" or "Y iyengar".
Secondly if you feel you are having it since it is the race you belong, I beg you to please go through the history once again. It is now proven fact that the aryan/dravidian theory is of controversial in nature. Caution, here I am not saying it is false, but just it is controversial. There are atleast equal facts to discard the theory as to believe it.
Murali.

Anonymous said...

திராவிட சித்தாந்தங்களின் மூலநூல் பெரியாரின் புத்தகங்கள் என பிரகடணபடுத்தியுள்ளீர்கள். பெரியாரின் சித்தாந்தங்கள் விவாதத்துக்கு உட்பட்டவையா? மாற்றங்களை ஏற்க்க கூடியதா? இல்லை இறுதி நூலா?

//அதே வேளையில் இன அடையாளத்தை மறக்கச் சொல்கிறீர்களா?//


நீங்கள் மேற் சொன்னதில் உள்ள இனம் என்பது பிறப்பால் வருவதாய் இதுவரை வரைமுறைகள் இருந்து வருகின்றன. நீங்கள் முன் சொன்ன பதிலில் திராவிடம் பிறப்பாலும், இருப்பாலும், கொள்கை பற்றுதலாலும் வருவது என்று கூறியுள்ளீர்கள். இரண்டும் முரண்படுகின்றது. எது சரி?

//சமூகநீதிக் களத்தில் திராவிடன் என்ற சொல்லினை பயன்படுத்துவது கொஞ்சம் வசதியாக நம்மால் உணரமுடிகிறது அல்லவா?//


சமூகநீதி களத்தில் ஆதிக்கவாதி, அடக்குமுறை எதிர்ப்பாளன் என்ற இருநிலை தாண்டி திராவிடன் என்ற நிலை என்ன மதிப்பை அல்லது வசதியை தருகின்றது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளவும்.
சமூகநீதி அளவிடக்கூடியதா? யார் அளவிட முடியும்? எந்த இடத்தில் சமூக நீதி நிலை நாட்டப்படுகின்றது என்று நினைக்கிறீர்கள்
//அடக்குமுறை சாதீய அமைப்பே.//

அடக்குமுறையில் ஈடுபடும் எல்லா சாதீய அமைப்புகளுக்கும் எதிரே உயர் குரல் கொடுக்கும் திறன் திராவிட சித்தாந்ததிற்கு உண்டா? சாதிய கட்சிகளை திராவிடம் ஆதரிக்கிறதா? ஆமெனில் எந்தெந்த சாதிகள் கட்சி ஆரம்பிக்கலாம் யார் யார் ஆரம்பிக்க கூடாதென்று விளக்கவும்.

கட்சி ஆரம்பித்த சாதிகள் ஆதிமுதல் இன்று வரை சாதியத்தின் அடுக்கு நிலையில் யார் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கவில்லை என உறுதியாக கூறமுடியுமா?

இப்போதுள்ள அரசியல் கட்சிகளில் எது உங்கள் திராவிட கோட்பாடோடு ஒத்துச் செல்கின்றது?

மற்ற கேள்விகள்
********************
திராவிடம் என்பது பிறப்பால் அமையும் இனக்குழுவெனில் இனப்பற்று, இனவெறி என்ற இரண்டு நிலைகளை பற்றி திராவிட கருத்துகள் ஏதேனும் உள்ளதா?

பெரியாரின் நூலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் என சொல்லாதீர்கள். எனக்கு உடனடியாக பெரியார் நூல்களை வாங்கி படிக்கும் வசதி இல்லை. நீங்கள் அறிந்திருப்பதை பகிர முயற்சி செய்தால் எம் போன்றோருக்கு மகிழ்வாய் இருக்கும்.

Anonymous said...

No answers, G'men ?

Samudra.

Anonymous said...

அப்போ மேலே உளறிக் கொட்டுனது எல்லாம் சைக்கோ சமுத்ரா தானா?

said...

//எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.
//

????????????????)))):::...

said...

பெரியார் காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தார்.பதவிகள் தந்தார்கள்.ஆனால் பெரியாரின் சாதி ஒழிப்பை ஏற்றுக் கொள்ள வில்லை,காந்தியார் உட்பட.
அப்போது பிராமினர அல்லாதார்(Non-Brahmin)என்றுதான் மற்ற இயக்கங்கள் இருந்தன.பெரியார் நீதிக்கட்சி தலைமை ஏற்றபின் தான் நாம் ஏன் பிராமணரல்லாதார் என்று கூறிக்கொள்ள வேண்டும்.நமது இனம் திராவிட இனம்.ஆகவே திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றி அறிஞர் அண்ணா முன்மொழிந்து சேலம் மாநாட்டில் அறிவித்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாட்டில் வாழும் அனைவர்க்கும் ஆரம்பிக்கப் பட்டது.
பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட இனத்திற்கு,பார்ப்பனரல்லாதவர்க்காக் இயக்கப்பட்டு,இயங்கி வருகிறது.
ஒரே ஒரு எழுத்து (ர்) ஆனால் சரித்திரமே மாறும் அளவு வேறுபாடு.

தமிழர் என்பது பார்ப்பனரல்லாதார் என்று குறிக்காது.சமசுகிருதத்தைப் போற்றி ஆனால் தமிழில் பிழைப்பு நடத்துபவர்கள் நாங்களும் தமிழர்கள் என்று ஏமாற்றலாம்.ஆனால் அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள முடியாது.
திராவிட நாட்டில் வாழ்பவர்களும் அனைவரும் திராவிடர்கள் அல்ல.