Wednesday, January 24, 2007

தந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி!

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

10 comments:

Anonymous said...

சபாஷ்! சரியான போட்டி!

said...

வானாம் விட்ருங்க.. ரொம்ப வலிக்குது. அப்றம் அழுதுருவேன்.

Anonymous said...

நல்ல கவிதை

Anonymous said...

அருமையான பதிவு நண்பர்களே

தந்தை பெரியார் பற்றிய மிக சிறந்த கவிதைகளில் இது ஒன்று. அண்ணன் காசி ஆனந்தனின் கவித்திறத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

said...

அவர் தான் பெரியார் பார்
அவர் தான் பெரியார்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்

(மண்டை சுரப்பு - எண்ணங்கள், கருத்துகள்)

இப்படி தொடங்கும் பாடலை பள்ளியில் படித்தது நினைவிற்கு வருகிறது. அந்தப் பாடல் யார் எழுதியது என்று நினைவில்லை. முழு பாடலும் கிடைக்குமா?

said...

நல்ல கவிதை. மிக்க நன்றி.

said...

//இப்படி தொடங்கும் பாடலை பள்ளியில் படித்தது நினைவிற்கு வருகிறது. அந்தப் பாடல் யார் எழுதியது என்று நினைவில்லை. முழு பாடலும் கிடைக்குமா? //

பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி குமரன்.

அப்பாடல் பாவேந்தரால் பாடப்பட்டது.

விரைவில் அப்பாடலை நம் வலைப்பூவில் முழுமையாக வலையேற்றுவோம்.

said...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெரியார்! அதனால் தான் பெரியார் என்ற பெயரை கேட்டாலே ஆதிக்க சாதிகளுக்கு வலிக்கிறது.

said...

நன்றி.
சில திருத்தங்கள் நினைவிலிருந்து:

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை வாட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழரின் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

ஆட்டைத் தீண்டுவான் மாட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினார் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோல எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூண்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன் துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கே மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

said...

அவை புஷ்பவனம் குப்புசாமியின் ஒலிப்பேழையில் கேட்டிருந்தபடி!