சிங்கப்பூர் பெரியார் மன்ற விழாவில் திராவிடர் கழகதலைவர் டாக்டர்.வீரமணி அவர்கள் பேசிய உரை பல விடயங்களை தெரிவித்தது, அதில் முக்கியமானது டாக்டர்.வீரமணி அவர்களுக்கு வரும் வசைமாரி பொழியும் கடிதங்களை பற்றி அவர் கூறியது, அவர் சிங்கப்பூர் வருவதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு தபாலட்டையில் அவரை திட்டி வந்த கடிதத்தின் ஆரம்பமே வேசி மகனே என்று தான் இருந்ததாம், இது போன்ற கடிதங்கள் அவருக்கு பல வந்துள்ளனவாம், இந்த கடிதங்களில் வீரமணி அவர்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாக திட்டி வருமாம், திருமணமான புதிதில் அவருக்கு வந்த கடிதமொன்றில் அவரது மனைவியை தரக்குறைவாக திட்டி வந்திருந்ததாம், அதை அவரது மனைவியிடம் கொடுத்து உம்மை பாராட்டி கடிதம் வந்துள்ளது படித்து பார் என்றாராம், தற்போது அவருடைய பேரப்பிள்ளைகளை திட்டியெல்லாம் கடிதங்கள் வருகின்றதாம், இது போன்ற தரக்குறைவான கடிதங்களை எல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவும் மானமிகு.வீரமணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய பேரப்பிள்ளைகளுக்கும் உண்டாம்.
இப்படியான வசை பாடும் கடிதங்கள் தான் தாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன என்றும் கூறினார், இம்மாதிரியான வசை மொழிகள் தங்களை எப்போதும் பாதிப்பதில்லை என்றார், மேலும் பெரியார் அவர்கள் வாங்காத வசை மொழிகள், கல்லடிகள், சொல்லடிகளோடு ஒப்பிடும்போது இவையெல்லாம் ஒன்றுமேயில்லை என்றார்.
பெரியார் திரைப்படம் பற்றிய ஒரு நிகழ்ச்சியையும் வீரமணி அவர்கள் பகிர்ந்து கொண்டார், சத்யராஜ் அவர்கள் பெரியாராக வேடமிட்டு நடிக்கும் பெரியார் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பெரியார் மீது அழுகிய முட்டையை வீசுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம், 'டம்மி' முட்டை பயன்படுத்தலாமென இயக்குனர் சொன்னபோது இயக்குனர் அவர்களிடம் சத்யராஜ் உண்மையான அழுகிய முட்டையையே பயன்படுத்துங்கள், பெரியார் அவர்கள் எத்தனையோ முறை அழுகிய முட்டையால் இது மாதிரி அடி வாங்கியுள்ளார், நான் ஒரு முறைதானே வாங்கப்போகிறேன், மேலும் இது எதார்த்தமாக வரவேண்டும் என்றாராம், உடனே மூன்று நான்கு முட்டைகளை ஏற்பாடு செய்தார்களாம், இயக்குனர் கூறினாராம் ஒரு முட்டை மட்டும் போதும் இதையே சத்யராஜ் தாங்குவாரா என்று தெரியவில்லை என்றாராம், பின் ஒரு முட்டையால் அடித்து படமாக்கப்பட்டதற்கே தாங்கமுடியவில்லையான் சத்யராஜால், இதை குறிப்பிட்டு விட்டு பின் வீரமணி அவர்கள் கூறினார் பெரியார் அழுகிய முட்டைகளால் மட்டும் தாக்கப்படவில்லை, முட்டையினுள் மனித மலத்தை வைத்து பெரியார் மீது அடிப்பார்கள், அந்த அருவெருப்பான நாற்றமிக்க தன் மேல் விழுந்த மலத்தை தள்ளிவிட்டுவிட்டு எந்த தடங்கலும் இல்லாமல் பேச்சை தொடர்வாராம், அதன் பின் அவரது பேச்சில் மேலும் மேலும் வேகம் கூடுமாம் என்றார், பல இடங்களில் கூட்டத்தை கலைக்க பாம்பு வீசுவார்களாம், பாம்பு பாம்பு என்று கூட்டத்தினுள் புரளி கிளப்புவார்களாம்.
நானும், கோவி.கண்ணன் அவர்களும் அய்யா வீரமணி அவர்களிடம் உரையாடிய போது கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார், அத்தனையும் தாங்கிக்கொண்டு தான் பெரியாரும் வசை மொழிகளை வாங்கிக்கொண்டு தான் வீரமணி அவர்களும் செயல்படுகிறார்கள், நேரடியாகவே மலம் வீசப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டவர்களுக்கு வலைப்பதிவுகளில் வீசப்படும் எழுத்து மலங்கள் ஒன்றுமே செய்யாது, அதையெல்லாம் தாங்கும் பக்குவத்தை கொண்டவர்கள் அவர்கள்.
எனவே இரவுகழுகார் இந்த பதிவில் கூறியது போல வீரமணி அவர்களிடம் வலைப்பதிவுகளில் அவர்கள் மீது வீசப்படும் மோசமான எழுத்துகளை அச்செடுத்து அளிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை, மேலும் இதைப்பற்றி மானமிகு.வீரமணி அவர்களிடம் நானும் கோவி.கண்ணனும் பேசவேயில்லை.
சிங்கப்பூரில் மானமிகு.வீரமணி அவர்களிடம் பேசியபோது பெரியாரின் எழுத்துகளை யுனிகோடாக மாற்றி இணையத்தில் வெளியிட அனுமதி கேட்டோம், அவரும் அதற்கான அனுமதியளித்தார், இதைத்தவிர வேறு எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கப்படவில்லை.
நன்றி
குழலி
Sunday, January 28, 2007
வேசி மகனேயும் வீரமணி அய்யாவும்
Posted by
திராவிட தமிழர்கள்
at
2:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இதைத்தவிர வேறு எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கப்படவில்லை.//
குழலி அய்யா,
என்ன வரம் கேட்டிருந்தாலும் அள்ளிக் கொடுத்திருப்பாரே அண்ணல் மானமிகு.அதை விடுத்து நீங்கள் பெற்றுக் கொண்டது,ஒரு கப் காஃபியும்,அய்யா எழுத்துக்களை யூனி கோடில் அச்சேற்ற உரிமையும் மட்டும்.உங்களுடைய தன்னலமற்ற போக்கினைக் கண்டு மெய்சிலிரிக்கிறது அய்யா,மெய்சிலிர்க்கிறது.வாழ்க உங்கள் தொண்டு.
பாலா
//பெரியாரின் எழுத்துகளை யுனிகோடாக மாற்றி இணையத்தில் வெளியிட அனுமதி கேட்டோம்,//
முக்கியமான விஷயம். பெரியார் எழுதிய அனைத்தையும் பொதுவில் வைத்தால் மட்டுமே தேவைக்கேற்றமாதிரித் திரிப்பதைத் தவிர்க்கமுடியும்.
///பெரியாரின் எழுத்துகளை யுனிகோடாக மாற்றி இணையத்தில் வெளியிட அனுமதி கேட்டோம்,///
படிக்க ஆவலுடன் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்
பாலா அய்யா உங்கள் பாராட்டுக்கு :-)) மிக்க நன்றி அய்யா
Post a Comment