Monday, February 19, 2007

தமிழிசை ஏன்? தந்தை பெரியார் பகுதி - 2

தமிழிசை ஏன்? தந்தை பெரியார் பகுதி-1

தோழர்களே! இன்று உங்களிடையே சொற்பொழிவாற்றுவது எனக்கு மகிழ்ச்சிக் குரியதாயினும், சொற்பொழிவின் தலைப்பு எனக்கு அத்தனை மகிழ்ச்சிக்குரியதாயில்லை. ‘தமிழ்இசை’ என்பது பற்றிப் பேசவேண்டியது இன்று மிக்க அவசியமாகி விட்டது என்றாலும், அது எனக்கும் மிக்க உற்சாகமான தலைப்பே ஆனாலும், எப்படியோ அந்தத் தலைப்பும் சேதிகளும் இன்று விவாதத்துக்கு இடமுள்ளதாகப் போய்விட்டதால் முதல் முதல் - அதுவும் கட்டுப்பாடானதும் உங்களுக்-குச் சுதந்திரமற்றதுமான ஒரு °தாபனத்தில், விவாதத்துக்கு இடமான விஷயத்தைப் பற்றிப் பேசினால் அது எனக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியாய் இருந்தாலும், சிலருக்காவது விரும்பத் தகாததாக ஆகக்கூடும். அப்படி ஏற்பட்டால் அது அவ்வளவு நன்மையான காரியமாகாது.

என்றாலும், இன்று நாட்டில் இத்தலைப்பு ஒருவித உணர்ச்சியைக் கொண்டதாக இருப்பதால் நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்று கருதி அதுபற்றிய என் கருத்தைச் சொற்-பொழிவு வழியாகச் சொல்லுகிறேன். நீங்கள் நடுநிலைமையில் இருந்து கேட்டு, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ள வேண்டிக் கொள்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால், தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும்? என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழ-னால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்ட-வன், ஏன் மறுக்கவேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் - தமிழ்மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட்-பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந் தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு’ என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் -- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? தமிழில் பாடி-னால் இசை கெட்டுப் போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன். காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோ-ருக்-கும் ஒன்றுபோல் இருக்கமுடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.

‘தமிழில் பாடு’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டுபண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.

‘இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்-காரர்கள் சில இடங்களுக்குப் போகும்போது பந்தோப°துக்கு ஆண்களைக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாயும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படியாக நேர்ந்து விட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகி-னாலும் விலகிவிடலாம்; அல்லது, அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகிவிட நேரிடலாம் என்றுகூடக் கருதவேண்டியது-மாகிவிட்டது.

பொதுவாகச் சொன்னால், இந்த நிலை-யானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை ‘தமிழன் அன்னிய மொழியைக் கற்கவேண்டும்’ என்று சொல்லு-வது தேசாபிமானமும் நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருத்தியுமாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டுக்கேட்கவேண்டும்; இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்! மற்றும், ‘தமிழனுக்குத் தமிழ் வேண்டும்; தமிழ் இசை வேண்டும்’ என்பது தேசத் துரோகமாகவும், கலைத் துரோகம் வகுப்புத் துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும் எழுதுவதுபோல் - தமிழனுக்குத் தமிழனல்-லாதவன் - தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டி-ருப்பவன் - தேசாபிமானம், மொழியபிமானம், கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதேயாகும்.

தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சிய-டைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன் - அவன் எப்படிப்பட்ட-வனானாலும், தலையிடுவது முதலில் ஒழிந்தாக-வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.

(‘குடிஅரசு’, 19-.2-.1944)

நன்றி
உண்மை

0 comments: