Thursday, March 15, 2007

தந்தை பெரியார் திரைப்படத்துக்கு வாழ்த்துக்கள் !


ஞான சம்பந்தன் இசைப்பாட
ஒரு கோவில் கதவு மட்டுமே திறந்தது !

தன்மான நம்பந்தன் வசைபாடிட
அனைத்துக் கோவில் கதவுகளும் திறந்தன !

கருப்பு நிறத்தை நெருப்பு நிறம்
ஆக்கியவன் நீ !

செருப்பு தைப்பவனை கண்டதும்
உருக்கமானவன் நீ !

உண்டு கொளுத்த தண்டங்களை
கண்டு சினந்தவன் நீ !

உண்டியல் காசுக்கு உபதேசம் செய்தவரின்
சிண்டைப் பிடித்தவன் நீ !

ஈரோட்டில் பிறந்த நீ, ஓட ஓட
விரட்டியது சதி செய்த பேய்களை !

சாத்திரம் என்று சொல்லுபவர்களின் சாதித்திமிர் உம்
ஆத்திரத்தால் அடங்கியது !

ஆத்திகம் பேசி அடிமைநிலை ஆதரித்தோர்க்கு
நாத்திகன் நீ அளித்தது நல்ல தீர்ப்பு !

கற்பு இருக்கிறதா ? கன்னி வியாபரிகளுக்கு
கற்கொண்டு பொட்டில் அடித்தவன் நீ !

பொற்சிலை ஆனாலும் கண்ணில்லை என்றால்
நிற்பதில் பயனில்லை என்றவன் நீ !

சொற்பதம் சிறக்க நல் தமிழில் சீர்திருத்த
அற்புதம் செய்தவன் நீ !

வாழ்ந்த காலம் யாம் அறியோம், அண்ணலே
மீழாது இறந்த காலம் என்றும் உமக்கில்லை!

8 comments:

said...

இப்டியே பினாத்திண்டு அலைய வேண்டுயதுதான்!

said...

அவரால் நாம் வாழ்கிறோம்.

அவரை நினைவுகூறும் திரைக்காவியம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

said...

கவிமாலை சூட்டிய கவிஞரின் நாமம் யாதோ?

said...

//கவிமாலை சூட்டிய கவிஞரின் நாமம் யாதோ? //

லக்கி! நம்ம முத்துகுமரனா இருக்கும் என நினைக்கிறேன்.

said...

//அவரால் நாம் வாழ்கிறோம்.

அவரை நினைவுகூறும் திரைக்காவியம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! //

நான் கூற விழைவதும் அதே.

இந்த பிழைகளை நீக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கொளுத்த- கொழுத்த
மீழாது- மீளாது

-விழிப்பு

said...

//லக்கி! நம்ம முத்துகுமரனா இருக்கும் என நினைக்கிறேன்//
அபி அப்ப அது நானில்லை. அருமையான கவிதை படைத்த நண்பருக்கு நன்றி

educated dalit said...

i hope the movie becomes a huge failiure and soud a death bell to OBC fascism aka periyarism.

said...

//educated dalit said...
i hope the movie becomes a huge failiure and soud a death bell to OBC fascism aka periyarism.
//
எஜ்ஜூகேட்டட் தலித், நானொரு பிசி , நானொரு எம்பிசி என்று வந்து தான்யா பேசுறாங்க எனக்கு தெரிந்து சொந்த பெயரில் வராமல் எஜ்ஜூகேட்டட் பிராமின், எஜ்ஜூகேட்டட் ரெட்டியார், இன்ன பிற ஆட்களெல்லாம் வந்து பார்ப்பனீயத்தை திட்டுவதோ பெரியாரை பாராட்டுவதோ இல்லை.... ம்.... நல்லா இருந்தா சரி தான்....