Friday, April 13, 2007

"பெரியார்" திரைக்காவியம் - மே 25 வெளியீடு!




'பெரியார்' திரைப்படத்தின் முதல் பிரதி, கடந்த சில வாரங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. தணிக்கைக் குழுவினர் எவ்வித மறுப்போ, வெட்டோ செய்யாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்பதை உணர்த்தும் 'யூ' சான்றிதழ் தந்துவிட்டனர்.

பகவான் ஒரு நாளில் என்று பெரியாருக்கும், சனாதனவாதிகள் இருவருக்கும் அப்போது நடைபெற்ற கதாகாலட்சேப ரூபத்தில் கேள்வி, பதிலாக அமைந்த பாடலின் வரிகள் தங்களைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து மக்கள் கட்சியின் பொருளாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார்.

இந்த வழக்கை அனுமதிக்கவே முடியாது என்பதற்குச் சரியான காரண, காரியங்களை தனது 17 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விலாவாரியாக விளக்கிய தலைமை நீதிபதி பெஞ்ச், பெரியார்தம் கொள்கை, தொண்டு பற்றியெல்லாம் விரிவாக விளக்கியுள்ளது. வழக்கு 24ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

முதல் பிரதி தயாரான நிலையில், உலகத் தலைவரான பெரியார் திரைப்படம் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் மொழிமாற்றம்-உரையாடல்கள் செய்யப்படும். இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படும். அதே நாளில் உலகின் பற்பல நாடுகளிலும் வெளியிடத் தேவையான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறத் தொடங்கிவிட்டன.

இதற்கிடையில் எங்கும், எத்திக்கிலுமிருந்தும் இதே கேள்வி, பெரியார் படம் எப்போது வெளிவரும், எப்போது வெளிவரும் என்ற கேள்விதான். அப்படி ஆவலோடு இருந்த அனைவரும் உலகம் முழுவதும் பெரியார் மே மாதம் 25ஆம் தேதி முதல் உலா வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம்.

- லிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் கோ.சாமிதுரை

3 comments:

Anonymous said...

2 மாசம் முன்னால கல்யாண வீட்ல உயர்நிதிமன்றத்தை கண்டித்த பல்கலை வல்லுனர்களுக்கு இப்போ
நிதிமன்றம் நடுநிலை தவறாத மன்றமாயிடுச்சா?....

said...

மே 25 தமிழ்நாட்டில் திருவிழான்னு சொல்லுங்க, படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

Cut koduthal avargal auto pogum avargal veetukku

Karuppu