நம் திராவிடத் தமிழர்கள் வலைப்பூவில் பாவலர் அறிவுமதி அவர்களின் பார்ப்பன வாத்தியார்கள் தொடர் வெளிவந்திருப்பது தெரிந்ததே. தொடரின் முதல் பகுதியை கண்டதுமே வழக்கம்போல கண்டனங்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
பதிவர் ஓசை செல்லா ஒரு படி மேலே போய் "லக்கிக்கு" கண்டனம் என்றொரு பதிவிட்டிருக்கிறார். அவர் கண்டனம் தெரிவிக்க வேண்டியது பாவலர் அறிவுமதிக்கு. எனக்கல்ல. கண்டனம் யாருக்கு தெரிவிப்பது என்பதிலேயே குழம்பிப் போய் நண்பர் அவசரப்பட்டு அபத்தமாக ஒரு பதிவை வீணடித்திருக்கிறார்.
ஒரு இணையக் குழுமத்தில் அக்கட்டுரை தடை செய்யப்பட்ட பின்பே, பல திராவிட அன்பர்கள் நமக்கு மின்னஞ்சலிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு நம் வலைப்பூவில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆயினும் இத்தொடரை திராவிடத் தமிழர்களில் பதிக்கலாமா? என்ற குழப்பம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. எனவே பொறுப்பாளர்களில் ஒருவரை தொடர்புகொண்டு ஆலோசனை செய்த பின்பே பதிந்திருக்கிறேன். அக்கட்டுரை எங்களுக்கு உடன்பாடானதாக தோன்றியதாலேயே நம் வலைப்பூவில் வந்திருக்கிறது. தொடர்புடைய குழுமத்தில் இக்கட்டுரைக்கு ஏற்பட்ட தடை, பேரறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை"க்கு இடப்பட்ட தடையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது.
நண்பர் ஓசை செல்லா அக்கட்டுரையை திரும்பவும் ஒரு முறை தெளிவாகப் படித்தல் நன்று. ஞாநி பாலியல் குறித்து எழுதக்கூடாது என்று பாவலர் எங்கேயும் அக்கட்டுரையில் தடையெல்லாம் போடவில்லை. பாலியல் குறித்த கட்டுரையையோ, சிறுகதையையோ அல்லது வேறு ஏதேனும் இலக்கியக் கூறிலோ ஞாநி எழுதுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஆயினும் "பாலியல் கல்வித் தொடர்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு எழுதுவதே இங்கே விமர்சிக்கப் படுகிறது. மருத்துவர் ஒருவரின் மகன் மருத்துவராகாமலேயே அறுவைச் சிகிச்சை செய்ததுக்கு ஒப்பானதாகவே அதை பாவலர் குறிப்பிடுகிறார். அவரது கூற்றில் என்ன தவறு? மருத்துவர் மாத்ரூபூதம், மருத்துவர் ஆஷா, மருத்துவர் நாராயணரெட்டி, மருத்துவர் ஷாலினி போன்றவர்கள் வெகுஜன ஊடகங்களில் பாலியல் கல்வி தொடர்கள் எழுதியபோது அறிவுமதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே?
மேலும் அப்பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் ஞாநி பார்ப்பனராக இல்லாதிருக்கும் பட்சத்தில், இதுபோன்ற விமர்சனங்கள் ஞானி மீது வந்திருக்குமா? என்கிற ரீதியில் (செந்தமிழில்) வந்துகொண்டிருக்கின்றன. நாம் மேலே குறிப்பிட்ட மருத்துவர்கள் பலரும் பார்ப்பனர்கள் தான். அதற்காக அவர்கள் மீது பாய்ந்தோமா?
தொலைக்காட்சிகளிலும் இதர வெகுஜன ஊடகங்களிலும் சரியான மருத்துவப் பயிற்சியோ, கல்வியோ இன்றி பாலியல் கல்வித் தொடர் நடத்தி தங்கள் மருத்துவசாலைகளுக்கு விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களுக்கு இணையாகவே ஞாநியை எங்களால் இவ்விவகாரத்தில் காண முடிகிறது. ஞாநி ஒரு மருத்துவர் அல்லாத பட்சத்தில் இத்தொடர் சரியானது தானா? என்பதை நாம் எப்படி நம்ப முடியும்? பல லட்சம் பேர் படிக்கும் ஒரு வெகுஜன ஊடகத்தில் தவறான ஒரு கருத்தை இவர் அறிந்தோ, அறியாமலோ சொல்லிவிட்டால் அதை திரும்பப் பெறுவது எளிதா?
- இக்கருத்துக்களை ஓசை செல்லா மட்டுமல்லாமல் அனைவருமே ஒரு கணம் சிந்தித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
Monday, August 20, 2007
ஓசை செல்லாவுக்கு "நச்"சுன்னு ஒரு பதில்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஞானியும் செல்லாவும் தருவன நச்சு
நீங்கள் தரும் இந்த பதில் 'நச்'
//ஆயினும் "பாலியல் கல்வித் தொடர்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு எழுதுவதே இங்கே விமர்சிக்கப் படுகிறது. மருத்துவர் ஒருவரின் மகன் மருத்துவராகாமலேயே அறுவைச் சிகிச்சை செய்ததுக்கு ஒப்பானதாகவே அதை பாவலர் குறிப்பிடுகிறார். அவரது கூற்றில் என்ன தவறு? மருத்துவர் மாத்ரூபூதம், மருத்துவர் ஆஷா, மருத்துவர் நாராயணரெட்டி, மருத்துவர் ஷாலினி போன்றவர்கள் வெகுஜன ஊடகங்களில் பாலியல் கல்வி தொடர்கள் எழுதியபோது அறிவுமதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே?//
இதைத்தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.
http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html
//ஆயினும் "பாலியல் கல்வித் தொடர்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு எழுதுவதே இங்கே விமர்சிக்கப் படுகிறது. மருத்துவர் ஒருவரின் மகன் மருத்துவராகாமலேயே அறுவைச் சிகிச்சை செய்ததுக்கு ஒப்பானதாகவே அதை பாவலர் குறிப்பிடுகிறார்.
//
இதான் இதான் மேட்டரே.... அப்படியே வேறு எங்கெல்லாம் திருட்டு நடந்திருக்கின்றது என்பதையும் முழங்கியிருக்கிறார் பாவலர் அறிவுமதி....
ஐயா,
டாக்டர்கள் இதுவரைக்கும் எழுதினவற்றை விட ஞானியின் கட்டுரையின் தரம் மிக நன்றாகவே உள்ளது.நம்ம medical university பாடதிட்டத்திலேயே child psychology முழுவதும் cover செய்யப்படவில்லை .கொஞ்சம் பிற்போக்குத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.
LAND OF KAMASUTRA
DONT KNOW WHERE IS URETHRA
DEJA
jj_05@hotmail.co.uk
//டாக்டர்கள் இதுவரைக்கும் எழுதினவற்றை விட ஞானியின் கட்டுரையின் தரம் மிக நன்றாகவே உள்ளது.//
தரம் என்பதற்கும், உண்மை என்பதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.
ஒருவர் பொய்யை எழுதிவிடுவாரோ என்கிற பயத்தில் அவரை எழுதவே வேண்டாம் என்பதா?
அப்படின்னா டாக்டர் அல்லாத எந்த தாய் தகப்பனும் தன் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி சொல்லித் தர முடியாதா?
ஞானி அரசியல் கட்டுரை எழுத என்ன தகுதி இருக்கிறது? அவை எல்லாம் அவரின் கருத்துக்களும் சேகரித்த தகவல்களும்தானே. அது போல இதையும் எழுதுவதில் என்ன சிரமம் எனப் புரியவில்லை.
சாமானியரின் பார்வையில் பாலியல் கல்வியை வழங்குவது தவறல்ல என்பது என் கருத்து.
அதை கல்வியா இல்லையா என அழைப்பது ஒரு விவாதமே. ஆனால் நாம் எல்லாவற்றையும் வகுப்பறைக்குள் மட்டுமே கற்றுக்கொள்ளவில்லை என்பத்வும் ஆனந்த விகடன் பாடப் புத்தகமோ கோனார் உரையோ அல்ல என்பதுவும் உண்மை.
என் தாழ்மையான கருத்துக்கள்.
Post a Comment