Wednesday, April 18, 2007

ஆனந்த கும்மி !

ஏற்கனவே விட்டது சிகப்பு என்ற பெயரில் பெண் பதிவரை 'கும்மியடி பெண்ணே' கேவலமாக எழுதி கும்மியடித்த முகமூடி குழுதான் (பதிவர் முகமூடி அல்ல) அவைகள். இப்பொழுது போலிப் பதிவு எழுதியவர் முகவரி தெரிந்துவிட்டதால் குற்றம் செய்தவரை மறைக்க குற்றத்தை கண்டுபிடித்தவர்கள் மீதே சேறுவாரி தெளிக்கின்றனர். 3000 வருடங்களாக ஆட்சி பீடத்தை ஆட்டி வைத்தவர்கள் என்ற நினைப்பு இன்னமும் இருக்கிறதோ என்னவோ.

போலி யார் அவன் முகவரி என்ன என்று எவருக்குமே தெரியாது. சிலர் சாட்டில் பேசியதாகவும், போனில் பேசியதாகவும் சொல்கிறார்கள். போலி இவராக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்களே தவிர்த்து போலியை நேரில் பார்த்து பேசினேன் என்று ஒருவரும் சொல்லவில்லை. அவன் ஆபாசமாக எழுதினான், குடும்ப பெண்களைப் பற்றி எல்லாம் எழுதினான் என்பதை எவரும் ஆதரிக்கவில்லை. போலியின் செயலில் உடன்பட்ட பலரும் அவன் அனுகுமுறையில் உடன்படுகிறோம் என்று சொல்லவில்லை. எதோ ஒரு தவறான அனுமானத்தினால் பெண்பதிவரைப் பற்றி போலி வலைத்தளம் அமைத்து பின்பு பலர் அது தவறென சுட்டியதும் நீக்கிவிட்டான்.

ஆனால் நாங்கெளெல்லாம் அப்பாவிகள், எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை அதானால் ஒண்ணுக்கும் போகமாட்டோம் என்றும் திராவிட திம்மிகள் தான் இழிபிறவிகள் இதுபோல் செயல்படுபவர்கள் என்று கூறிக் கொண்டிருந்த முகமூடிக் கூட்டம் (பதிவர் முகமூடி அல்ல) தாம் அமைத்த ஆபாசக் கதை வலைத்தளம் ( போலி பிரச்னைக்கும் முன்பே ப்ரொபைல் படி 2005 லேயே உருவாக்கப்பட்டது) அமைத்து இருந்து சரோஜா தேவி நடையை விட கூடுதலாகவே விரசம், காமம் பொங்கும் கதைகளை எழுதியது தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மட்டுமின்றி, முகத்துக்கு நேராகவே பார்த்துப் பழகிய பெண் பதிவர் பெயரில் ஆபாச இணைய தளம் அமைத்ததும் மட்டுமில்லாமல் அந்த பெயரில் போலி பின்னூட்டம் போட்டு பெண் பதிவரை அவமானப்படுத்த துணிந்ததை, சல்மா என்ற பெயரில் எழுதியதையும் பதிவரே ஒப்புக் கொண்டு எழுதியும் கொடுத்துள்ளார். மேலும் அதில் தொடர்புள்ள பெரிய மனிதனையும், பால் மனம் மாறாத பதிவரின் பங்கு குறித்துக் கூறியுள்ளார்.

பெயர் வெளியிடாமல் பாலாபாரதி சம்பவத்தை மட்டும் சொல்லிவிட்டு இந்த பிரச்சனையை மன்னித்து விட்டுவிடலாம் என்று பதிவில் சொல்லிவிட்டு இருந்தார். அதில் பெரும்பாலனவர்கள் மன்னிப்பது சரியென்றே சொல்லி இருக்கின்றனர். சல்மா / ஜோதி என்ற பெயரில் வெறும் ஆபாசமாக மட்டும் எழுதி இருந்தால் பிரச்சனை இருப்பதாக திராவிடத் தமிழர்கள் கருதவில்லை. சல்மா ஐயூப் விவகாரம் வெளியில் வந்ததும் தான் தெரிந்தது சல்மா ஐயூப் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் இஸ்லாம் மதத்தை இழிவாக விமர்ச்சித்து இருந்த விசயமே. சல்மா ஐயூப் பதிவினால் ஏற்கனவே அவமானம் அடைந்த இஸ்லாமிய பதிவர்கள் சிலரில் நன்பன் சாஜி மற்றும் சிலர் சல்மா ஐயூப் என்ற பெயரில் எழுதியவரை பெண் பதிவர் மன்னித்தாலும் தாங்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்றும் வெளிப்படையாக் தன் குற்றத்தை சம்பந்தப்பட்டவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.

இதையே இந்துத்துவா வாதிகள் திரித்து இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்கி ஆதரவு திறட்ட முயன்று முடியாமல் போனதால் திரட்டியை திட்டிக் கொண்டு இருக்கின்றனர். சல்மாவின் குறிப்பிட்ட பதிவு தேன் கூடு திரட்டியில் தான் வந்தது என்று தெரிந்தும் தேன் கூட்டின் மீது சந்தேகம் கொள்ளாமல் தேவையின்றி பல்வேறு பதிவர்களின் வழி பார்பனீயத்திற்கு எதிராக பதிலடி கிடைப்பதால் தமிழ்மணத்தின் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர். அதாவது எவனோ மெயில் அனுப்பி ஐபி தமிழ்மணம் கொடுத்து இருக்கலாம் என்று சொன்னானாம், இவருக்கும் சந்தேகமாக இருக்கிறதாம் தமிழ்மணம் தெளிவு படுத்த வேண்டுமாம். சந்தேகப் பட்டு கட்டிய மனைவி சீதையையே தீக்குளிக்க வைத்த இராம ராஜிய கணவு கானும் அனுமான்களுக்கு எவர் பெயரிலும் சந்தேகம் வருவது பற்றி எவருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா ?

ஆதாரத்தைக் கொடு என்று சொல்லிய தமிழ்மணத்தின் செயல் அடாவடியாக தெரிகிறதாம். நேசகுமார் எங்கிருந்து எழுதுகிறார் என்று சொல்ல வேண்டு மென்ற நிர்பந்தம் தமிழ்மணத்திற்கு இருந்திருந்து கொடுத்திருந்தால் அண்ணார் இஸ்லாமியருக்கு கிளப்பிய அவதூறுகளுக்காகவே பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார். நேசகுமார் யார் என்ற விபரங்களை கிச்சு போன்றவர்கள் சொல்லியதைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பதிவர்கள் பற்றிய விபரங்களை தமிழ்மணம் காக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நேசகுமார் சொல்கிறார் பதிவுகளை 150 பேர் படிக்கிறார்களாம் அதானால் இதைவிட்டு விலகுவதில் நட்டம் ஒன்றும் இல்லையாம். அந்த 150 பேருக்குத்தான் நேசகுமார் என்ற பெயரும் தெரிந்து இருக்கிறது, திண்ணை, தமிழோவியம் மற்றும் சிபி டாட் காம் தவிர ஏனைய இதழ்களின் வாசகர்களுக்கு நேசகுமார் எவர் என்றே தெரியாது. அதுவும் வலைகளில் எழுதியதால் தான் அவர் பெயரே தெரிந்து இருக்கிறது. இவரை எத்தனைபேர் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ அதே அளவுக்குத்தான் நாகூர் ரூமியையும், பதிவர் நல்லடியாரையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆறு மாதத்திற்கும் குறைவான கால அளவுகளில் தான் நேசகுமாரும், இந்துமத இடிதாங்கி அரவிந்தன் நீலகண்டனும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இவர்கள் இல்லாத போதும் பதிவுகள் வந்து கொண்டிருந்தது, புதிதாக பதிவர்களும் வந்து கொண்டிருந்தனர். எத்தனைப் பேர் போனாலும் புதிதாக வருபவர்களும் ஏற்கனவே எழுதுபவர்களும் இந்த ஆரிய கூத்தர்களை கண்டு ஒன்றும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்கள்

*****

பதிவுலகை கெடுத்ததில் போலியும் போலிக்கு ஒரிஜினலும் தான் முக்கிய காரணம். ஒரிஜினல் குறிப்பிட்ட ஜாதியை சார்ந்து இருப்பதால் அவருக்கு சப்பைக் கட்ட ஆரம்பித்தே சக பார்'பினி'ய ஆதரவலர்களால் சல்மா போன்ற பெரிய விசயங்கள் நடந்தேறிவிட்டன. முகமூடிகள் கூட்டம் ( பதிவர் முகமூடி அல்ல) அடிப்பது ஆனந்த கும்மியா ? இல்லை ! மாட்டிக் கொண்டு அவமானப்பட்டதன் ஆற்றாமை ஒப்பாரி. கேட்டுவிட்டு 'ஐயோ பரிதாபம்' என்று அடுத்த பதிவை எழுதுவோம்.

Friday, April 13, 2007

"பெரியார்" திரைக்காவியம் - மே 25 வெளியீடு!




'பெரியார்' திரைப்படத்தின் முதல் பிரதி, கடந்த சில வாரங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. தணிக்கைக் குழுவினர் எவ்வித மறுப்போ, வெட்டோ செய்யாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்பதை உணர்த்தும் 'யூ' சான்றிதழ் தந்துவிட்டனர்.

பகவான் ஒரு நாளில் என்று பெரியாருக்கும், சனாதனவாதிகள் இருவருக்கும் அப்போது நடைபெற்ற கதாகாலட்சேப ரூபத்தில் கேள்வி, பதிலாக அமைந்த பாடலின் வரிகள் தங்களைப் புண்படுத்துகிறது என்று கூறி இந்து மக்கள் கட்சியின் பொருளாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார்.

இந்த வழக்கை அனுமதிக்கவே முடியாது என்பதற்குச் சரியான காரண, காரியங்களை தனது 17 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விலாவாரியாக விளக்கிய தலைமை நீதிபதி பெஞ்ச், பெரியார்தம் கொள்கை, தொண்டு பற்றியெல்லாம் விரிவாக விளக்கியுள்ளது. வழக்கு 24ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

முதல் பிரதி தயாரான நிலையில், உலகத் தலைவரான பெரியார் திரைப்படம் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் மொழிமாற்றம்-உரையாடல்கள் செய்யப்படும். இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படும். அதே நாளில் உலகின் பற்பல நாடுகளிலும் வெளியிடத் தேவையான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறத் தொடங்கிவிட்டன.

இதற்கிடையில் எங்கும், எத்திக்கிலுமிருந்தும் இதே கேள்வி, பெரியார் படம் எப்போது வெளிவரும், எப்போது வெளிவரும் என்ற கேள்விதான். அப்படி ஆவலோடு இருந்த அனைவரும் உலகம் முழுவதும் பெரியார் மே மாதம் 25ஆம் தேதி முதல் உலா வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம்.

- லிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் கோ.சாமிதுரை