
பெரியாரைப் பிழையாமை வேண்டும்
தங்க தட்டில் கசடை தந்தால்
தட்டு தங்கமென கசடை
தின்பதாகுமோ கண் மூடி ?
புராண புழுதி புளுகு மூட்டைகள்
புனுகு பூசி புரண்டு வந்தாலும்
புனுகிற்காக புசிக்க இயலுமா?
கவைக்குதவா கற்பனை கதைக்கும்
காலத்திற்கேற்ப மாறா சிந்தனைக்குமே
காட்டுமிராண்டி மொழியென்றாரே!!
கற்பிலிருந்து கண்ணகி வரை
குறளிலிருந்து காப்பியம் வரை
காலம் பொருள் சூழல் கண்டே
காண வேண்டும் பொருளதனை
பெரியாரைப் பிழையாமை வேண்டும்
பார்ப்பன எதிர்ப்பே
பார்ப்பனீய தத்துவ எதிர்ப்பே
தவிர்த்த ஆளெதிர்ப்பில்லையே!
ஆளடிக்க சொல்லவில்லையே
ஆள் பேசும் பார்ப்பனீய
தத்துவமடிக்க தலைப்பட்டாரே!
தத்துவமடிப்பதை விட்டு
ஆளடிக்க தலைப்பட்டதெனில்
தந்தை பெரியாரே தட்டி கேட்பாரே
பெரியாரைப் பிழையாமை வேண்டும்
பெரியாரின் பிறந்த நாளில்
சூளுறைப்போம்
தந்தை பெரியாரைப்
பிழையாமை வேண்டுமென்றே!!!
நீ மனிதன் தான்
நீ மனிதன் தான்!
வர்ணாசிரமத்தின்
வயிற்றில் அடித்த
நீ மனிதன் தான் !
வர்ணாசிரமத்தின்
வலிக்கேற்ப
அடித்தவன்
அடியானாகவோ
அவதாரமாகவோ
ஆக்கப்படுவான்!
புத்தன் அவதாரமானான் !
நந்தன் அடியாரானான் !
நீ மனிதன் தான்
அவதாரமாக்கவோ
அடியாராக்கவோ
விடமாட்டோம் உம்மை.
புத்தன் அவதாரமானான்
அவன் கொள்கைகள்
அவதாரங்களுக்கானதானது
நந்தன் அடியாரானான்
அவன் செயல்கள்
அடியார்களுக்கானதானது
மிச்சமிருப்பது
நீ தான்
நீ மனிதனாகவே இரு
உன் கொள்கைகள்
மனிதர்களுக்காகட்டும்
நீ மனிதனாகவே இரு
உன் வாழ்க்கை
மனித வாழ்க்கையாகட்டும்
நீ மனிதனாகவே இரு
உன் செயல்கள்
மனித செயல்களாகட்டும்
உம்மை அவதாரமாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
மனிதர்களுக்கு தேவை
உம்மை அடியாராக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
மனிதர்களுக்கு தேவை
உம்மை அசாதரணமானவனாக்க
விடமாட்டோம்
ஏனெனில் நீ
சாதாரணமானவர்களுக்கு தேவை
உம் பிறந்தநாளில்
உரக்க சொல்கிறோம்
நீ மனிதன் தான்.
Monday, September 17, 2007
பெரியாரைப் பிழையாமை வேண்டும்
Posted by
திராவிட தமிழர்கள்
at
9:24 AM
3
comments
Labels: periyar, பெரியார் பிறந்த நாள்
Subscribe to:
Posts (Atom)